என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government Town bus"
- தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் பகுதியில் இருந்து சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் வரை சென்று கொண்டு இருந்த அரசு டவுன் பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த கோரிக்கை மனுவை ஏற்று எம்எல்ஏ தேவராஜ் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி புதிய அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இதைதொடர்ந்து நேற்று நாட்டறம்பள்ளி அருகே சந்திரபுரம் பகுதியில் இருந்து வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் வரை அரசு டவுன் பஸ் 9A 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதன் பிறகு பஸ்ஸில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கு எம்எல்ஏ தனது சொந்த செலவில் டிக்கெட் பரிசோதகரிடம் பணம் கொடுத்து அனைவருக்கும் துவக்க விழா முன்னிட்டு இலவசமாக அனுப்பி வைத்தார்.
இந்த அரசு டவுன் பஸ் தினசரி காலை 6 மணியளவில் நாட்டறம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் பகுதியில் புறப்பட்டு புத்தகரம் சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு 7 மணிக்கு சென்று அடைகிறது.
மீண்டும் மாலை 6.15 மணியளவில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புறப்பட்டு 7.15 மணியளவில் செட்டேரி டேம் சென்று அடைகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து தேவராஜ் எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர்.
விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மற்றும் திருப்பத்தூர் டெப்போ கிளை மேலாளர் மயில்வாகனம் துணை மேலாளர் வணிக ராஜராஜன் கோட்ட மேலாளர் கிருஷ்ணகிரி அரவிந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.பெரும்பாலான மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பயன்படுத்தி பயணம் செய்துவருகின்றனர்.
இவர்கள் காலை வேளையில் பள்ளிக்கு செல்ல அந்த வழியாக 8-ம் எண் அரசு டவுன் பஸ் மட்டுமே உள்ளது. இதனால் பஸ்சில் கூட்டம் நிரம்பி மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.
எனே ஆபத்தான பயணத்தை தடுக்க கூடுதலாக ஒரு டவுன் பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:- நயினார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்துவரும் எங்களுக்கு பயணம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது.கூடுதலாக இயங்கி வந்த 32-ம் எண் டவுன் பஸ் ½ மணி நேரம் தாமதமாக வருவதால் வேறு வழி இல்லாமல் இந்த ஒரு பஸ்சில் இளமனூர், கண்ணதேவன்புலி, கரைமேல்குடியிருப்பு, வலசை, அண்டக்குடி, வாணியவல்லம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் 8-ம் எண் டவுன் பஸ்சிலேயே பயணம் செய்து வருகிறோம்.
ஒரு சில நேரங்களில் மாணவிகளே படிகளில் தொங்கியபடி செல்லவேண்டிய அவல நிலை உள்ளது. கூட்டம் அதிகம் இருப்பதால் சில சமயங்களில் பள்ளிக்கு செல்வதையே தவிர்த்து வருகிறோம். எங்களால் பணம் செலுத்தி வாடகை வாகனங்களில் போகும் அளவுக்கு வசதி இல்லாததால் கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்