search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt exams"

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையஅலுவலகத்தில் மத்திய, மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி சக்திநகரில் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக அனைத்து மத்திய மற்றும் மாநில போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது எஸ்.எஸ்.சி., சி.ஹெச்.எஸ்.எல். தகுதித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அலுவலக வளாகத்திலேயே அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நேரடியாக நாளை முதல் தொடங்கப்பட உள்ளது . மேலும் மாதிரி தேர்வுகள், துறை சார்ந்த வல்லுநர்களின் ஊக்க உரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை, அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 04633-213179 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேகமாக வடிவமைக் கப்பட்ட https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல், பாடக்குறிப்புகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் 60 அடி ரோடு சக்தி நகர் தென்காசி என்ற முகவரியில் இந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள், வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி பயிற்சி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் 60 அடி ரோடு சக்தி நகர் தென்காசி என்ற முகவரியில் இந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்ட வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் அறிவிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2 முதன்மைத் தேர்வு மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கிரேடு-2 ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலகத்தில் வைத்து நடத்தப்படுகிறது.

    போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன டையுமாறு கேட்டுக் கொள்ள ப்படுகிறது.

    பயிற்சி வகுப்பின் சிறப்பு அம்சங்கள்:

    முற்றிலும் இலவச பயிற்சி வகுப்புகள், வாரம் ஒருமுறை மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி பயிற்சி நிலையங்களில் உள்ள ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட https:// tamilnaducareerservices. tn. gov. in என்ற இணையதளத்தில் தங்கள் சுய விவரங்களை உள்ளீடு செய்து அனைத்து ஆன்லைன் தேர்வு எழுதுதல் பாடக்குறிப்புகள் மட்டும் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.

    மேற்காணும் தேர்வுக்கு விண்ணப்பித்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண்ணுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது 9092554182 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    ×