search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka seller"

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 27 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • தொழிலை விட்டு விட்டு வீட்டில் இருந்தார்.

    பீளமேடு

    கோவை பீளமேடு தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் முத்து பெருமாள் (வயது 34), இவர் காளப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மளிகை கடை நடத்தி வந்தார். சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் தனது தொழிலை விட்டு விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது 27 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். 

    • அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்று வந்தனர்.
    • 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் கிடங்கல் 2 அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் பகவான் (வயது 51). இவர் கிடங்கள் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்று வருவதாக திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் அவர் கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர் அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டு பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர் அதேபோல திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பல நாட்களாக குட்கா விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.

    ×