என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Health officials"
- தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன.
- தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னையில் தற்போது வாந்தி, பேதியால் மருத்துவ மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும், குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்படுவதாலும் வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன. இவற்றை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதியை தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஜிங்க் மாத்திரை ஆகியவை முகாம்களிலும், வீடுவீடாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாந்தி, பேதி ஏற்படாமல் தங்களை பாதுகாக்க பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை குடிநீரால் ஏற்படும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும். இதுகுறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
- கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜ்குமார் ஆலோசனையின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்பிரபாகரன், இனிய குமார் சதீஷ் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை, உணவு விடுதிகள், கறிக்கடை, கோழிக்கடை, பலசரக்கு கடைகளில் பாலிதீன் பயன்பாடு பற்றியும், பெட்டிக் கடைகளில் தடை செய்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் உள்ளதா? என்றும் கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.
செங்கோட்டை அருகே தமிழக எல்லையான புளியரை சோதனை சாவடியில் கடந்த 20-ந் தேதி இரவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 12 லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் சோதனை தீவிரமாக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் கொட்டுவதற்காக ஏற்றி வந்த பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த 27 வாகனங்கள் அனைத்தும் சோதனைச்சாவடியின் அருகில் உள்ள தனியார் நிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கழிவுகளுடன் இருந்த 27 வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக செங்கோட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு, நெல்லை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இலத்தூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் மாரீஸ்வரி, செங்கோட்டை சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், செல்வமுருகன், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு தலா ரூ.3 லட்சமும், 18 வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதமும், 5 மினிலாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராத தொகையை செங்கோட்டை அரசு கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்ற பின்னர் லாரிகள் மற்றும் வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும், கழிவுகளை ஏற்றிய இடத்துக்கே கொண்டு சென்று இறக்கிவிட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகன உரிமையாளர்கள் இன்று அதற்கான அபராத தொகையை கட்டினார்கள். இதன்பின்னர் லாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திரும்பி சென்றன. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்