search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hema Commitee"

    • ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில், அது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டியை கேரள அரசு கடந்த 2017-ம் ஆண்டு அமைத்தது.

    பழம்பெரும் நடிகை மற்றும் ஓய்வுபெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அடங்கிய அந்த கமிட்டியின் முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தங்களின் விசாரணை அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு மாநில அரசிடம் ஹேமா கமிட்டி கொடுத்தது.

    ஆனால் அந்த அறிக்கையை அரசு உடனடியாக வெளியிடவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அறிக்கையை அரசு வெளியிட்டது. அதில் சினிமா வாய்ப்புக்காக மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது அம்பலமானது.

    இது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது. அந்த குழுவினர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இந்தநிலையில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ஹேமா கமிட்டியின் முழுமையான விசாரணை அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொத்தம் 3,896 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து 5 நாட்களாக நடந்தது.

    இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அதன்படி ஹேமா கமிட்டியிடம் மிகவும் பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் 20 பேரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படுகிறது.

    அவர்களை 10 நாட்களுக்குள் நேரடியாக தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண் என்பதால், அவர்கள் அனைவரிடமும் சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் அதிகாரிகளே விசாரணை நடத்த உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    வாக்கு மூலம் அளித்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதனடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். சட்ட நடவடிக்கையை விரும்புவோரின் வாக்குமூலத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சிறப்பு புலனாய்வுகுழு தெரிவித்திருக்கிறது.

    எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் விரைவிலேயே விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

    • மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

    பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மலையாள பிரபல நடிகர்களுக்கு அடுத்தடுத்து விழும் பாலியல் குற்றச்சாட்டால். மலையாள திரையுலகமும், ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜீவா வருகை தந்தார்.
    • பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஜீவா வருகை தந்தார். அப்போது ஜீவா செய்தியாளர்களை சந்தித்தார்

    அப்பொழுது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இது உண்மையில் மிகவும் தவறானதுதான். எல்லா துறைகளிலும் இதுபோல் நடக்கிறது. முன்பு 'மீ டூ' (Me Too) மூலம் பலர் தங்களுக்கு நடந்த பிரச்சினைகளை சொன்னார்கள். தற்போது மீண்டும் அதே போல் ஒரு விஷயம் நடக்கிறது. சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். " என்றார்.

    மீண்டும் அதைப்பற்றியே கேட்டதால் ஜீவா கோபமாகி கேள்வி கேட்ட செய்தியாளரிடம் நான் அதற்கு ஏற்கனவே பதிலளித்து விட்டேன். இந்த விஷயம் கேரள சினிமாவில்தான் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுப்போல் பிரச்சனை கிடையாது" என தெரிவித்தார்.

    இவர் இப்படி கூறியது இப்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரபல பாடகியான சின்மயி ஜீவாவிடம் அவரது எக்ஸ் தளத்தில் " எப்படி நீங்கள் தமிழ் திரையுலகத்துறையில் பாலியல் சீண்டல்கள் இல்லை என்று கூற முடியும்" என கேல்வி எழுப்பியுள்ளார். இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது
    • இந்த பிரச்சனையை குறித்து தமிழ் திரைப்பட நடிகர்களிடம் கேள்வி கேட்டால். யாரும் தங்களுக்கு தெரியாது என மௌனம் காக்கின்றனர்.

    மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது. மலையாள சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

    இதுக்குறித்து நடிகர் மோகன்லால் நடிகர் சங்கம் சார்பாக அறிக்கையை வெளியிட்டார் அதில். நடிகர் சங்கம் இந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு முழு ஒத்துளைப்பு தரும் என கூறியிருந்தார். தினமும் ஒவ்வொரு செய்திகளாக வெளிவந்துக் கொண்டே இருக்கிறது.

    இந்த பிரச்சனையை குறித்து தமிழ் திரைப்பட நடிகர்களிடம் கேள்வி கேட்டால். யாரும் தங்களுக்கு தெரியாது என மௌனம் காக்கின்றனர். நடிகர் ஜீவா, கார்த்தி, ரஜினி உள்பட அனைவரும் இதற்கு பதிலளிக்க மறுக்கின்றனர்.

    இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் மலையாள சினிமா ஹேமா அறிக்கையைப் பற்றி கேட்டனர் .ஆனால் ரஜினிகாந்த அதை பற்றி தனக்கு தெரியாது என கூறிவிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு மற்றும் டைரக்டர் ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடிகை பலாத்காரம் தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும், மலையாள பட உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு முடிவு செய்தது.

    இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தீவிர விசாரணை நடத்தி 2019-ம் ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. 233 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாக அறிக்கையின் சில தகவல்கள் வெளியானது. அதில் மலையாள பட உலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பது உறுதியானது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து, மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டனர். கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் ரஞ்சித் மீது மேற்கு வங்காள நடிகை ஸ்ரீலேகா பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். தொடர்ந்து நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு, சுதீஷ், டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டன.

    இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பாலியல் புகாரில் சிக்கிய சித்திக், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டைரக்டர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் பதவியில் இருந்தும் விலகினர்.

    இதற்கிடையில் பாலியல் புகார்கள் தொடர்பாக டைரக்டர்கள், நடிகர்கள் மீது போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு மற்றும் டைரக்டர் ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்து பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்கள் தங்களின் மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் வழக்கில் தொடர்புடைய நடிகர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் முகேஷ் கொச்சி மாரட் பகுதியில் உள்ள வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் சோதனை செய்து சாட்சியங்களை சேகரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஏற்கனவே வீட்டு சாவியை ஒப்படைக்க நடிகர் முகேசுக்கு தகவல் கொடுத்ததாகவும் ஆனால் அவர் சாவியை கொடுத்துச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு உள்ளார்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனால் போலீசார் வீட்டில் சோதனை நடத்த முடியவில்லை.

    இதற்கிடையில் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆனால் அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும் விசாரணையின் போது முகேஷ் எம்.எல்.ஏ. எந்த பலனும் பெறக்கூடாது என அவர் தெரிவித்து உள்ளார்.

    ×