search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindi imposituion"

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் பாளை கே.டி.சி.நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • அனைத்து கிராமப்பகுதிகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் பாளை கே.டி.சி.நகரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வலெட்சுமி அமிதாப், செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக பதாகைகள் ஏந்தியவாறு உறுப்பினர்கள் அனைவரும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட பகுதிகளில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமப்பகுதிகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 51 இடங்களில் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு பகுதி உடற்பயிற்சி கூடத்துக்கும் ரூ.8 லட்சம் வழங்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இதனால் அந்த பகுதி இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பில் சேர வாய்ப்புள்ளதாக அமையும்.

    மாவட்ட கவுன்சிலர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 கோடியே 53 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ரூ.25 லட்சம் கிடைக்கும். அதன் மூலம் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ள லாம். கூட்டத்தில் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அமிதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×