என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hindu Front protest"
- பூசாரியின் வேஷ்டியை இழுத்து அவமதித்ததாகவும், ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தென்கரை காந்தி சிலை அருகில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளன்று மகா தீபம் ஏற்றுவதில் தி.மு.க.வினருக்கும், ஓ.பி.எஸ். மகன் ஜெயபிரதீப் தலைமையிலான அன்பர் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது எம்.எல்.ஏ. சரவணகுமார் பூசாரியின் வேஷ்டியை இழுத்து அவமதித்ததாகவும், ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தென்கரை காந்தி சிலை அருகில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் தி.மு.க.வினருக்கு கோவிலில் என்ன வேலை என்றும், இப்படி கும்பலாக வந்து ஆகமவிதிகளுக்கு எதிராக அர்ச்சகரின் வேஷ்டியை பிடித்து இழுத்து இந்து மக்களின் மனதை புண்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது என்றும் பேசினார்.
மேலும் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
- இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை:
இந்து முன்னணியின் துணை அமைப்பான இந்து கலை இலக்கிய முன்னணியின் மாநில பொறுப்பாளர் கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த வகையில் கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ், கோட்ட பேச்சாளர்ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர்கள் மகேஷ்வரன், சோமமேசுந்தரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்