என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hit by a car"
- தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.
- இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (50).இவர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து மாலை நேரத்தில் நடை பயிற்சிக்காக வெள்ளையம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தண்ணீர் பந்தல் மேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் பின்னால் வந்த ஒரு கார் மோதியதில் சகுந்தலா மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் கீழே தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சகுந்தலாவிற்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. சீனிவாசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அந்தியூர் போலீசில் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.
- அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது.
- அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியகவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. சண்முகம் தற்போது தனது மாமியார் ஊரான செல்லிகவுண்டனூரில் வசித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் சண்முகம் வேலை தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அந்தியூர் ரோட்டில் குறிச்சி பிரிவு என்ற பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத வகையில் சண்முகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
- திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு.
- திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு (38) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார். அப்போது காரைக்குடி யில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சிட்டிபாபு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிட்டிபாபு உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்