search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inaugural Ceremony"

    • 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்கி கொடுப்பது என்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

    தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கூட்டணியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களை குறைந்தது, 3 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

    தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் இன்று இரவு சென்னை திரும்புகிறார். வருகிற 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. அன்று கட்சி அலுவலகத்துக்கு சென்று கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசிக்கிறார்.

    கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'மக்கள் நலன் ஒன்றே தனது கொள்கை, அதுவே நாளைய உலகின் நவீன சித்தாந்தம்' என்று முழங்கி நம்மவர் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நாள் பிப்ரவரி 21.

    வரும் பிப்ரவரி 21-ந் தேதி நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று நம்மவர் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

    அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகி கள், உறுப்பினர்கள், நம்ம வர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!

    வாருங்கள்! ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். நாடாளுமன்றத்தில் நம்மவர்

    இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச்' லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளில் ஒன்றே கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கமல்ஹாசன் கை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • இலவச ஜூட் பேக், லேப்டாப், பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.

    மதுரை

    இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமான அசஞ்ஜர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழிற்பயிற்சி பள்ளி இணைந்து மதுரை அவனி யாபுரத்தில் இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்பு ராமன் தலைமையில் நடை பெற்றது.

    கே.வி.ஐ.சி மண்டல இயக்குனர் அசோகன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், சுய தொழில் தொடங்குபவர்கள் மத்திய அரசின் 35 சதவீதம் மானிய தொகையை கடனாக பெறலாம் என்றார். இதில் பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகை யில், தமிழக அரசு மானி யத்துடன் புதிதாக தொழில் தொடங்கு பவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சிக்கு பின் தொழில் முனைவோராக மாறுவதற்கு எல்லா உதவிகளையும் வழி முறைகளும் செய்து தரப் படும் என கூறினார். சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி வங்கி வழிமுறைகள், கடன் பெற்று முன்னேறும் திட்டங்கள் குறித்து பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பெட் கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
    • தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகப்பேறு இறப்பு மற்றும் சிசு மரணம் ஆகியவற்றை முற்றிலும் வராமல் தடுக்கும் விதமாக 24 மணி நேர சேவை மையம் கடலூர் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் வம்சம்கடலூர் என்ற திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பொதுப்பணி த்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப்யாதவ், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா.இராஜேந்திரன், இராதாகிருஷ்ணன், சிந்தனைச் செல்வன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. 24 மணி நேர மகப்பேறு சேவை மையத்திற்கென பிரத்தியோகமாக தொலைபேசி எண்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி தொலைபேசி எண்கள் 7598512042, 7598512045 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்திய மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க உறுப்பினர்களிடம் தங்களது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களின் விபரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

    • புதுவை கவுண்டம் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நீர் குடம் பயணம் தொடக்க விழா நடைபெற்றது.
    • விழாவில் நீரின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நீர் குடத்தை அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, மார்ச் 22-ந் தேதி நிறைவு விழா நடக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டம் பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நீர் குடம் பயணம் தொடக்க விழா நடைபெற்றது.

    கவுண்டம்பாளையம்-வழுதாவூர் சந்திப்பில் இருந்து நீர் குடத்தை தண்ணீர் திருவிழா குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வரவேற்று பள்ளிக்கு எடுத்துச் சென்றனர்.

    பள்ளியில், தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், முதல்வர் கவிதா ஆகியோர் நீர் குடத்தை பெற்றுக் கொண்டனர். பின், நடந்த விழாவில் உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ் ராஜா வாழ்த்திப் பேசினார்.

    கோஜி ரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தரராஜன், குளங்களை காப்போம் குழுத் தலைவர் கார்த்திகேயன், வாட்டர் ஆப் புதுவை குழுத் தலைவர் தினேஷ், நன்செய் குழு நிறுவனர் அருள்சேகர் பாண்டிகேன் அமைப்பு புரகீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் நீரின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. நீர் குடத்தை அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, மார்ச் 22-ந் தேதி நிறைவு விழா நடக்கும்.

    ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட் அலுவலர் ஜெயந்தி, ஆசிரியர்கள் நெடுஞ்செழியன், கார்த்திக், ஜீவா செய்திருந்தனர்.

    • 1000 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட தொடக்க விழாவை மாவட்ட செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
    • பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1000 குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், துணை அமைப்பாளர் தென்பழஞ்சி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தை களுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பெண்களுக்கு சம உரிமை, சொத்தில் சம உரிமை ஆகிய முக்கியத்துவத்தை அளித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபோல அஞ்சல்துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின எதிர்கால நலன் கருதி கொண்டு வரப்பட்டது.

    தற்போது முதல்கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதி யில் 1000 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு ெதாடங்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த தொகையை குழந்தைகளுக்கு சேமியுங்கள். அது அவர்களின் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். முடியாதவர்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன், வட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி ேபசினர். இதில் இளைஞரணி பெருங்குடி வசந்த், தனக்கன்குளம் அஜித்குமார், மாவட்ட குழு உறுப்பினர் புவனேஸ்வரி ராஜசேகர், கிருத்திகா தங்கபாண்டி, திருமங்கலம் உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஜாய்ஸ், அஞ்சலக அதிகாரி முனிகணேஷ், காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.

    ×