search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Hockey Team"

    • விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47, 48 வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்தார்.
    • தொடரில் 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

    8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

    மூன்றாவதாக தாய்லாந்துடன் நடைபெற்ற போட்டியில் 13-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. நேற்று சீனாவுடன் நடந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியா. இந்நிலையில் இன்று ஜப்பானுடன் இந்தியா பலப்பரீட்சை செய்தது இந்தியா.

     

    விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 47, 48 வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்தார். 37 வது நிமிடத்தில் துணை கேப்டன் நவ்நீத் கவுர் கோல் விளாசினார். இதன்படி 3- 0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

    எனவே தொடரில் 5 வெற்றிகளுடன் இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை அரையிறுதீயில் மீண்டும் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா. 

    • முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது
    • பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல் அடித்தனர்.

    மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் டிராபி போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

    இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் ராஜ்கிர் மைதானத்தில் வைத்து மாலை 4.45 மணிக்குத் தொடங்கிய போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்தது. இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்டுத்திய இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைத் தோற்கடித்துள்ளது.

    குறிப்பாக இளம் இந்திய வீராங்கனை தீபிகா அதிகபட்சமாக ஐந்து கோல்களை விளாசினார். ஆட்டத்தில் 3வது, ,19வது, 43வது, 45வது, 45வது நிமிடங்களில் தீபிகா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.

    மேலும் பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல்களும் பியூட்டி டங் டங், நவ்நீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர். அடுத்ததாக வரும் சனிக்கிழமை நவம்பர் 16 ஆம் தேதி சீனாவுடன் இந்தியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது.
    • டெல்லி விமான நிலையத்தில் ஹாக்கி அணியினருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக் ஹாக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.1972-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய ஹாக்கி அணி வென்ற பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    மீண்டும் வெண்கலப்பதக்கம் வென்ற ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியினர் பாரீசில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று காலை நாடு திரும்பினர். வானில் பறக்கையில் விமானி தங்களது விமானத்தில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் நம்முடன் பயணிப்பதாக மைக்கில் அறிவித்ததுடன், அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். அப்போது சக பயணிகள் உற்சாகமாக கைதட்டி பாராட்டினர்.


    நிறைவு விழாவில் தேசிய கொடியேந்தும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மற்றும் அமித் ரோஹிதாஸ், ராஜ்குமார் பால், சுக்ஜீத் சிங், சஞ்சய் ஆகியோர் தவிர அணியின் மற்ற வீரர்கள் அனைவரும் வந்தனர்.



    டெல்லி விமான நிலையத்தில் இந்திய ஹாக்கி அணியினருக்கு மேள தாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஹாக்கி சம்மேளன நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது இசைக்கப்பட்ட இசைக்கு தகுந்தபடி வீரர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • 2023- 2024 எப்.ஐ.எச். மகளிர் புரோ ஹாக்கி லீக் சீசனுக்கான அடுத்த கட்ட ஆட்டங்கள் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன.
    • பெல்ஜியத்தில் வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையிலும், இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.

    புதுடெல்லி:

    2023- 2024 எப்.ஐ.எச். மகளிர் புரோ ஹாக்கி லீக் சீசனுக்கான அடுத்த கட்ட ஆட்டங்கள் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளன. அதன்படி பெல்ஜியத்தில் வரும் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையிலும், இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சலிமா டெடெ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நவ்னீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சலிமா டெடெ (கேப்டன்), நவ்னீத் கவுர், சவிதா, பிச்சு தேவி கரீபம், நிக்கி பிரதான், உடிதா, ஐஷிகா சவுத்ரி, மோனிகா, ஜோதி சவுத்ரி, மஹிமா சவுத்ரி, வைஷ்னவி விடல் பால்கே, நேஹா, ஜோதி, பல்ஜீத் கவுர், மனீஷா சவுகான், லால்ரேம்சியாமி, மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, தீபிகா, ஷர்மிளா தேவி, பிரீத்தி துபே, வந்தனா கட்டாரியா, சுனேலிட்டா டோப்போ, தீபிகா சோரேங்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.
    • 2020 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தவர் வருண் குமார்.

    இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் பெங்களூருவில் உள்ள ஞானபாரதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகார் அடிப்படையில் ஹாக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் வருண் குமார் இடம் பெற்றிருந்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

    2021-ல் அர்ஜூனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போக்சோ தவிர்த்து மோசடி பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புகார் அளித்த பெண் ஐதராபாத்தை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை ஆவார். இவருக்கு 17 வயதாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது.
    • சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது.

    பெங்களூரு:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்திய ஹாக்கி அணி நேற்று விமானம் மூலம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.

    முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது. அத்தகைய சிறந்த செயல்பாட்டை தொடர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்களது பிரிவில் சில கடினமான அணிகள் இடம் பெற்று இருக்கின்றன. இருப்பினும் நாங்கள் சிறப்பாக தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.

    இதேபோல் துணைகேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்கு செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு' என்றார்.

    ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி உஸ்பெகிஸ்தானை (காலை 8.45 மணி) சந்திக்கிறது. அடுத்த ஆட்டங்களில் 26-ந் தேதி சிங்கப்பூரையும் (காலை 6.30 மணி), 28-ந் தேதி ஜப்பானையும் (மாலை 6.15 மணி), 30-ந் தேதி பாகிஸ்தானையும் (மாலை 6.15 மணி), அக்டோபர் 2-ந் தேதி வங்காளதேசத்தையும் (பகல் 1.15 மணி) எதிர்கொள்கிறது.

    ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி 3 முறை தங்கப்பதக்கமும், 9 முறை வெள்ளிப்பதக்கமும், 3 தடவை வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளது. இதில் கடைசியாக 2018-ம் ஆண்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றதும் அடங்கும்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள். ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக், பின்களம்: வருண்குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சஞ்சய், நடுகளம்: நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், ஷாம்ஷெர் சிங், முன்களம்: அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.

    • இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி ஸ்பெயினில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றுள்ளது.
    • பெண்கள் ஹாக்கி அணிக்கு சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    டெல்லி:

    ஸ்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் 100-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு 4 நாடுகளுக்கு இடையிலான ஹாக்கித் தொடர் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க இந்திய அணியையும் தேர்வு செய்து இருந்தது. தொடரில் இந்தியா,இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த ஹாக்கித் தொடர் ஜூலை 25 முதல் 30 வரை நடைபெற இருக்கிறது.

    இந்தத் தொடரில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்து,நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக மோத உள்ளது. இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளுடன் மோத உள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்கள் ஹாக்கி அணிக்கு சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    ஸ்பெயின் தொடர் குறித்து இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில்:-

    ஸ்பெயின் தொடர் வலுவான அணிகளுக்கு எதிராக அணியின் உத்திகளைச் சரிசெய்வதற்கும், திறன்களை அளவிடுவதற்கும் சிறந்த களம். மேலும் இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் வரவிருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கித் தொடருக்கு முன் அணியின் தரத்தை அறிய உதவும். மேலும் இந்தத் தொடரில் சிறந்த வெற்றி பெற முயற்சி செய்வோம்.

    என்று கூறி உள்ளார்.

    இன்று நடைபெறும் முதல் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி இரண்டுமே தொடரை நடத்தும் ஸ்பெயினின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை எதிர்கொள்கின்றன.

    • உலக கோப்பை ஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
    • இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    புவனேஸ்வர்:

    2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    உலக கோப்பைஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் 'டி' பிரிவில் இந்தியா உள்ளது.

    இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி :

    கோல்கீப்பர் - கிரிஷன் பகதூர் பதக், ஸ்ரீஜேஷ் ரவீந்திரன்

    பின்களம் - ஜர்மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ்

    நடுகளம் - மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்

    முன்களம் - மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

    மாற்று வீரர்கள் - ராஜ்குமார் பால், ஜுக்ராஜ் சிங்

    • தற்போது அணியில் உள்ள ஜுனியர் வீரர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள்.
    • எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிர் அணி 4-வது இடத்தைப் பிடித்தது.

    இந்நிலையில் 2028-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி உச்சத்தை எட்டும் என்று, இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குநரும், ஒடிசா ஆக்கி சம்மேளன இயக்குநருமான டேவிட் ஜான் தெரிவித்துள்ளார்.

    தற்போது அணியில் உள்ள ஜுனியர் ஆக்கி வீர்ர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு வீரருக்கும் அதிக அனுபவம் கிடைக்கும் என்றும் டேவிட் ஜான் கூறினார். இதனால் எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஹாலந்து ஆக்கி அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன என்றும் எனினும் தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு இந்திய ஆக்கி அணி சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஆசிய போட்டி ஹாக்கியில் தங்கப் பதக்கம் வெல்லும் அணிகளில் இந்தியாவும் ஒன்று என கேப்டன் ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார். #AsiaGames2018
    ஆசிய போட்டி ஆகஸ்ட் 18-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா, பாலேம்பங்கில் நடக்கிறது. இதில் பிஆர் ஸ்ரீஜேஷ் தலைமையிலான் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பங்கேற்கிறது. ஆசிய போட்டியில் இந்தியா தங்கம் வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக ஸ்ரீஜேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் ‘‘எங்களுடைய இலக்கே, தங்கம் வென்று முன்னதாகவே டோக்கியோவில் 2020-ல் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற வேண்டும் என்பதுதான். இதைவிட வேறு ஏதும் இல்லை.



    அதன்பிறகு இரண்டு வருடங்கள் ஒலிம்பிக் தொடருக்காக தயாராக  நேரம் கிடைக்கும். தற்போதுள்ள இந்திய அணியால் ஜகார்த்தாவில் தங்கம் வெல்ல முடியும். தங்கம் வெல்வதற்காக சாதகமான அணிகளில் நாங்களும் ஒன்று’’ என்றார்.
    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #IndianHockey
    புதுடெல்லி:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஹாக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது.

    சமீபத்தில் நெதர்லாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் பெரும்பாலும் அணியில் அப்படியே இடம் பிடித்துள்ளனர். ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரூபிந்தர் பால்சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஜர்மன்பிரீத் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முழங்காலில் காயம் அடைந்த ரமன்தீப்சிங்குக்கு பதிலாக ஆகாஷ்தீப்சிங் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

    அணி தேர்வு குறித்து இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கருத்து தெரிவிக்கையில், ‘சமீபத்தில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். எதிர்பாராதவிதமாக காயம் அடைந்த ரமன்தீப்சிங் அணியில் இடம் பெறாதது இழப்பாகும். ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் வகையில் நமது அணி கொரியா மற்றும் நியூசிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பது நல்ல விஷயமாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நோக்குடன் செயல்படுவோம்’ என்றார். கடந்த (2014) ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி வீரர்கள் வருமாறு:-

    கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ் (கேப்டன்), கிரிஷன் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, சுரேந்தர்குமார், ரூபிந்தர் பால்சிங், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத்சிங், சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), சிம்ரன்ஜீத்சிங், சர்தார்சிங், விவேக் சாகர் பிரசாத், முன்களம்: சுனில், மன்தீப்சிங், ஆகாஷ்தீப்சிங், லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத்சிங். #IndianHockey
    ×