search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insapection"

    • உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பேக்க ரிகளில் தயாரிக்க ப்படும் கேக்குகள், காரம் மற்றும் இனிப்பு வகைகளில் அதிகப்ப டியான வண்ண ங்கள் கலக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் குன்னூர் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருள் தயாரித்த ஒரு பேக்கரியில் இருந்த 2 பாக்கெட்டுகள், சாக்லேட் பார்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரி கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்க ரியில் தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகள் மற்றும் கேக்குகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே வண்ணங்கள் சேர்க்கப்பட வேண்டும். மாறாக அதிகப்படியான அளவு வண்ணங்கள் சேர்க்க ப்படும் பேக்கரி களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் அனைத்து உணவு வணிகர்களும் தங்களின் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவுப்பொருட்களை சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். பூச்சிகளை பிடித்து அழிக்கும் எந்திரங்களை தங்கள் வளாகங்களில் பொருத்தியிருக்க வேண்டும். பேப்பர்களில் எண்ணை பலகாரங்களை அடுக்கி வைக்கவோ, பஜ்ஜி போண்டா போன்ற உணவுப்பொருட்களை பேப்பரில் வைத்து பரிமாறவோ கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×