என் மலர்
நீங்கள் தேடியது "Interim Government"
- வங்கதேசத்தில் இடைக்கால அரசு நாளை இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது.
- 84 வயதாகும் முகமது யூனஸ், 2006ம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசை பெற்றார்.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளதாக ராணுவத் தலைமை தளபதி அறிவித்துள்ளார்.
பிரதமர் என்ற பதவி இல்லாமல் தலைமை ஆலோசகர் என்ற பதவியுடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஆட்சி செய்ய உள்ளது
முகமது யூனஸ் தலைமையில் 15 உறுப்பினர்களுடன் வங்கதேசத்தில் இடைக்கால அரசு நாளை இரவு 8 மணிக்கு பதவியேற்கிறது
84 வயதாகும் முகமது யூனஸ், ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
- வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனால் இடைக்கால அரசு அமையும் என வங்கதேச ராணுவ தளபதி தெரிவித்தார். இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரவு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், வங்காளதேசத்தின் இடைக்கால அரசுடன் தொர்பில் இருந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "வங்காளதேச இடைக்கால அரசுடன் அமெரிக்க அரசு தொடர்பில் உள்ளது. இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க தூதர் கலந்து கொண்டார். வங்காளதேச மக்களுக்கு ஜனநாயகமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என இடைக்கால அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.
- தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
- இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
வங்காளதேசத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளன. கோவில்களும் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
தினாஜ்பூரில் உள்ள பிர்கஞ்ச் பகுதியில் காளி கோவிலில் 5 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பீல்தோரா, ஷாகுவாய் ஆகிய பகுதிகளில் உள்ள இந்து கோவில்களில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக, பொலஷ்கந்தா கிராமத்தை சேர்ந்த அலல் உதின் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வங்காளதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
அதன்பின் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இடைக்கால அரசு தெரிவித்தது. ஆனாலும் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.






