என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jaya Bachchan"
- மாநிலங்களவை தலைவர் அதிகார தொனியில் பேசியதால் ஜெயா பச்சன் கடுங்கோபம்.
- மாநிலங்களவை தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில பாஜக எம்.பி.க்கள் ஜெய பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைத்தனர். இவ்வாறு தன்னை அழைப்பதற்கு ஜெயா பச்சனுக்கு உடன்பாடு இல்லை.
தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும், ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்கள் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்து வந்தனர். இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், ஜெக்தீப் தன்கர் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்ற தொனியில் பதில் அளித்தார்.
#WATCH | On her exchange of words with Rajya Sabha Chairman Jagdeep Dhankhar, Samajwadi Party MP Jaya Bachchan says, "...I objected to the tone used by the Chair. We are not school children. Some of us are senior citizens. I was upset with the tone and especially when the Leader… pic.twitter.com/rh8F35pHsM
— ANI (@ANI) August 9, 2024
இதனால் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய பச்சன் கடும் வாக்குவாதம் செய்தார். மாநிலங்களவை தலைவரிடம் இருந்து எனக்கு மன்னிப்பு தேவை என்றார். ஜெயா பச்சனுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த ஜெயாபச்சன் கூறுகையில் "ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. தொல்லை கொடுப்பது போன்ற வார்தைகள். நீங்கள் பிரபலங்களாக (celebrity) இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் இப்போது பேசுவதுபோல் யாரும் பேசியதில்லை. இது பெண்களுக்கு மிகவும் அவமரியாதை" இவ்வாறு ஜெயா பச்சன் தெரிவித்தார்.
- என் பெயரை “ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்.
- கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
மாநிலங்களவையில் எம்.பி. ஜெயா பச்சனை பேச அழைக்கும்போது 'ஜெயா அமிதாப் பச்சன்' என அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறிப்பிட்டார்.
இதனை கேட்டதும் கடுப்பான ஜெயா பச்சன், என் பெயரை "ஜெயா பச்சன் என குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும். கணவரின் பெயரை குறிப்பிட்டு பெண்களை அழைக்கும் நடைமுறை புதியதாக உள்ளது. கணவனின் பெயரை தவிர பெண்களுக்கு எந்தவொரு சுயமான சாதனையும் இல்லாதது போல பார்க்கின்றனர்" என அதிருப்தி தெரிவித்தார்.
இதனையடுத்து உங்களது ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக உள்ள பெயரையே குறிப்பிட்டதாக ஹரிவன்ஷ் விளக்கம் அளித்தார்.
பின்னர் மாநிலங்களவையில் பேசிய ஜெயா பச்சன், டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனையான சம்பவம், இந்த விஷயத்தில் நாம் அரசியலை கொண்டு வரக்கூடாது என்று தெரிவித்தார்.
- சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார்
- பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சந்தித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் மோடியின் தலைமையில் மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சியமைத்த பின் நாட்டின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன் மீது 83 நிமிடங்கள் உரையாற்றினார். பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருந்த தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தளம் ஆளும் மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் பீகாருக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கியும், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்தும் இந்த பட்ஜெட் தாக்களாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்து ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணி மாநிலத் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
போரட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட்டில் திரைத்துறைக்கு என்று எதுவும் இல்லை, நாட்டுக்கும் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சினிமா டிக்கெட் தொடர்பான கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று திரைத்துறையினர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்