search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சினிமா துறை மீது கருணை காட்டுங்கள்: பாராளுமன்றத்தில் ஜெயா பச்சன் வலியுறுத்தல்
    X

    சினிமா துறை மீது கருணை காட்டுங்கள்: பாராளுமன்றத்தில் ஜெயா பச்சன் வலியுறுத்தல்

    • ஒரு துறை உங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுகளும் இதே விசயங்களைதான் செய்து கொண்டிருக்கின்றன.
    • ஆனால், இன்று நீங்கள் இதை வேறொரு கட்டத்திற்கு எடுத்துக் சென்றுள்ளீர்கள்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி.யான ஜெயா பச்சன், சினிமா துறை மீது கருணை காட்டுங்கள், சினிமா துறை பிழைக்க உதவி செய்ய வேண்டும் என நிதியமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஜெயா பச்சன் பேசும்போது கூறியதாவது:-

    ஒரு துறை உங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசுகளும் இதே விசயங்களைதான் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்று நீங்கள் இதை வேறொரு கட்டத்திற்கு எடுத்துக் சென்றுள்ளீர்கள். நீங்கள் முற்றிலும் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையை புறக்கணித்துள்ளீர்கள். ஏனென்றால், அதை உங்களுடைய நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறீர்கள்.

    இன்று ஜிஎஸ்டி வரியை விட்டுவிடுங்கள். ஒரு திரைகொண்ட (Screen) தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. சினிமா ஹால்களுக்கு மக்கள் செல்லவில்லை. ஏனென்றால் அங்கு எல்லாமே அதிக விலையாக உள்ளது. ஒருவேளை இந்த துறையை நீங்கள் முற்றிலுமாக அழிக்க விரும்பலாம். இந்த ஒரு துறைதான் ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியாவுடன் இணைக்கிறது.

    நான் எனது திரைப்படத் துறையின் சார்பாகப் பேசுகிறேன், மேலும் ஆடியோ-விஷுவல் துறையின் சார்பாக இந்த அவையில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தயவுசெய்து அவர்களைக் காப்பாற்றுங்கள். தயவுசெய்து அவர்களுக்காகக் கொஞ்சம் கருணை காட்டுங்கள். நீங்கள் இந்தத் துறையைக் கொல்ல முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள். இன்று நீங்கள் சினிமாவையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளீர்கள்.

    இது மிகவும் கடினமான தொழில். இந்த பிரச்சனையை மிகவும் தீவிரமாக பரிசீலிக்கவும். நிதியமைச்சர் இதைப் பரிசீலித்து, இந்தத் தொழில் நிலைத்து நிற்க உதவும் ஏதாவது ஒன்றைக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஜெயா பச்சன் பேசினார்.

    Next Story
    ×