search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayanthi Vizha"

    • அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    • இதையொட்டி நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    அனுமன் ஜெயந்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்ப டுகிறது.

    இதையொட்டி நெல்லையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நெல்லை அருகன்குளம் காட்டு ராமர் கோவில் எனப்படும் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நாளை காலை பூர்ணாபி ஷேகம் நடக்கிறது. அதன் இறுதியில் பஞ்சாபிஷேகம் நடக்கிறது.

    இதில் குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.

    இதில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

    அதனைத்தொடர்ந்து பல்வேறு பழங்களை கொண்டு பழக்காப்பு விழா நடக்கிறது. இதில் பழங்களால் செய்யப்பட்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படுகிறது. மாலையில் புஷ்பாஞ்சலி நடக்கிறது. தொடர்ந்து கடன் தொல்லை நீங்க வேண்டுவோர் வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு நடத்துவர்.

    நெல்லை சுத்தமல்லி ஜெய்மாருதி ஞானபீடம் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அதிகாலை சிறப்பு ஹோமங்கள், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், 108 தேங்காய் கொண்டு ஆஞ்சநேயர் ஹோமம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    பின்னர் அன்னதானமும், மாலையில் ராமர்சீதா திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதேபோல் நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில், நெல்லை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், தச்சநல்லூர் டவுன் ரோட்டில் உள்ள ஆஞ்சநோயர் கோவில், பாளை ராஜ கோபாலசுவாமி கோவில், ராமசாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    ×