என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jewel theft from woman"
- இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார்.
- வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி செரமிட்டாம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விசைத்தறி அதிபர். இவரது மனைவி சரண்யா (வயது 36).
கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் போர்டிகோவில் சரண்யா செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த மகன் ஷர்ஷித் (12) சத்தம் போட்டு உள்ளான்.
முகமூடி கொள்ளையன்
சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்ற சரண்யாவை முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு முதுகில் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த சரண்யாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து சரண்யா, திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிடிபட்டார்
இந்தநிலையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குமாரமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த பாண்டி என்கிற ராஜன் (வயது 38) என்பதும் செரமிட்டாம் பாளையம்புதூர் பகுதியில் சரண்யாவிடம் 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது.
25-க்கும் மேற்பட்ட வழக்குகள்
தொடர்ந்து அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பாண்டி மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்துமே அடிதடி, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் ஆகும்.
இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.
- அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
சேலம்:
சேலம் மாமாங்கம் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
இவரது மனைவி விஜயா (வயது 53), மாளிகை கடை வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர், விஜயாவிடம் பொருட்கள் கேட்டுள்ளார்.
அவர் அதை எடுக்க திரும்பியபோது விஜயா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து விஜயா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டிவி காமிராவை ஆய்வு செய்தனர். அதில், வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது.
அதனை வைத்து விசாரித்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் ஆர்.டி.பால் தெருவை சேர்ந்த விஜயகுமாருடையது என்பதும், அவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என ஏற்கனவே பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதும் தெரியவந்தது.
விஜயகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடி வந்த அந்த வாலிபர், விஜயாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார், அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார்.
- 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள ஓட்டேரி பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி சத்யா( வயது 29.) இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22-ந் தேதி தனது ஸ்கூட்டியில் ஓட்டேரிபாளையத்தில் இருந்து செஞ்சி நோக்கி தனது தோழியின் மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல வந்து கொண்டிருந்தார். குண்டலப்புலியூர் அருகே வரும்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்2 பேர் சத்யா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து சத்யா கொடுத்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை எடுத்து செஞ்சி டி.எஸ்.பி. கவினா தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. அந்த அடையாளத்தை வைத்து நகை பறித்த வாலிபர்களான திருவண்ணாமலையை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் முபாரக் (வயது 30) மற்றும் சாகித் அலி மகன் பாரூக் அப்துல்லா (வயது 23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்