search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery shop"

    • நகை கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    • இதனைத்தொடர்ந்து கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு ஜூவல்லரி நகைக்கடை பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி முதலீட்டு தொகை பெற்றது. மேலும் முதலீட்டு தொகைக்கு தங்க நகைகள் வழங்கும் திட்ட த்தையும் செயல்படுத்தியது.

    ஆனால் பொதுமக்களிடம் முதலீட்டு தொகைக்கு முறையாக வட்டித்தொகை வழங்காமலும், நகைத் திட்டத்திற்கு நகைகளை வழங்காமல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் அந்த ஜூவல்லரி நகைக் கடை மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தமிழகம் முழுவதும் 11 இடங்களில் அந்த ஜூவல்லரி நகை கடைகளில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காவிரி சாலையில் உள்ள ஜூவல்லரி நகை கடையில் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    இதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதனைத்தொடர்ந்து கடைக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    • நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
    • நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மதுரை கான்சாமேட்டு தெருவில் ராமதாஸ் மகன்கள் திருநாவுக்கரசு, பிரசன்னா மற்றும் ரத்தினம் மகன் ஜெயராமன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து "ஸ்ரீ காயத்திரி ஜூவல்லர்ஸ்" என்ற பெயரில் நகை கடையை தொடங்கினர்.

    மேற்கண்ட 3 பேரும் பொதுமக்களிடம் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் நகையை முதலீடு செய்தால் அதிக வட்டி (15 சதவீதம்) தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பெற்றனர். பின்னர் அதற்குரிய பணத் தையோ, நகைகளையோ திரும்ப தராமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டனர்.

    இதுகுறித்து பாதிக்கப் பட்ட புகார்தாரர் மதுரை பொருளாதார குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவை யில் உள்ளது.

    மேற்கண்ட நகை கடை யில் நகைகளை முதலீடு செய்து ஏமாந்த பொது மக்கள் அசல் ஆவணங்க ளுடன் மதுரை தபால் தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன் பேரில் உரிய சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.
    • சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த சின்னி யம்பாளையத்தை சேர்ந்த வர் சதீஷ் குமார் (31). இவர் ஈரோடு பொன் வீதியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது மொபட்டில் சோலார் நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது மோள கவுண்டன் பாளையம் பகுதியை கடக்க முற்பட்ட போது சதீஷ்குமாரின் மொபட் எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சதீஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×