search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jhulan Goswami"

    • மும்பை அணி தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தின் சார்லட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை அணி பந்துவீச்சு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான மும்பையை தலைமையிடமாக கொண்ட மும்பை அணியை ரூ.912.99 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. அந்த அணி நிர்வாகம் தற்போது மும்பை அணியின் பயிற்யாளர் குழுவை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து பெண்கள் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி அணியின் ஆலோசகர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் தேவிகா பால்ஷிகார் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    • 39 வயதான இவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார்.
    • அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    39 வயதான இவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார். சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மார்ச் 2002-ல் கோஸ்வாமி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 20 ஆண்டுகளில் அவர் 12 டெஸ்ட், 68 டி20 போட்டிகள் மற்றும் 201 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஆறு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (252) எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இந்திய பெண்கள் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஜுலன் கோஸ்வாமி டி20-யில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். #Goswami #TeamIndia
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி. 35 வயதாகும் இவர் இந்திய தேசிய அணிக்காக 68 டி20 போட்டியில் விளையாடி 56 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இவர் சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



    கோஸ்வாமி 169 போட்டியில் 203 விக்கெட்டுக்களும், 10 டெஸ்ட் போட்டியில் 40 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.
    ×