என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "john pandian"
- பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றம் கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேறக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜான் பாண்டியனும் அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.
ஆனால் எந்த தொகுதியில் தமிழக மக்கள் முன்னேறக் கழகம் போட்டியிடும் என அறிவிக்கப்படவில்லை. ஆனால் தென்காசி தொகுதியில் அக்கட்சி போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
- பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான்.
- மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது.
திருப்பூர்:
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் திருப்பூர் சிவன் தியேட்டர் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது ஜான்பாண்டியன் பேசியதாவது:-
தேவேந்திர குல வேளாள மக்கள் எத்தனை பேருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலையும், சலுகையும் கொடுத்துள்ளன. இப்படிப்பட்ட நிலையை மாற்ற வேண்டும். இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஒரு சட்டம். பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு சட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான். மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது. தமிழக கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் உள்ள பிரச்சனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ஜாதியின் பெயரை வைத்து திரைப்படங்கள் எடுத்து, அதன் மூலம் மற்றொரு சமுதாயத்தினரை இழிவுப்படுத்துவது தவறான முன்உதாரணம். அதுபோன்ற திரைப்படங்களை அரசு தடை செய்ய வேண்டுமேயன்றி, அதை ஊக்குவிக்கக் கூடாது.
பாராளுமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
- பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நெல்லை:
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும் மாநகரில் பல்வேறு பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு, பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர இளைஞரணி தலைவர் மணிமாறன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் மாரிமுத்து, பகுதி இணைச் செயலாளர் முருகேஷ் பாண்டியன், பாளை பகுதி இளைஞர் அணி செயலாளர் கே .எஸ். ராஜா, தொண்டரணி பொறுப்பாளர் மாரியப்பன், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி தலைவர் நாதன், இளைஞர் அணி செயலாளர் செந்தில் மல்லர், மாணவர் அணி பொறுப்பாளர் முத்து பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கோவில்பட்டி:
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் ஜூலை 15-ல் தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பான பிரசாரத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கோவில்பட்டிக்கு வந்தார். அவர் சங்கரலிங்கபுரம், அரசு போக்குவரத்து கழகம் முன், புளியம்பட்டி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அகில இந்திய தேவேந்திரர் குல வேளாளர் சங்கம் சார்பில் அடுத்த மாதம் 15-ம் தேதி தஞ்சாவூரில் மாநாடு நடக்கிறது. இதுதொடர்பாக நெல்லை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிரசார சுற்றுப்பயணம் முடித்துள்ளேன். தற்போது தூத்துக்குடி, தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்கிறேன். தேவேந்திரர் குல வேளாளர்களுடைய பல உட்பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திரர் குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என முன்னிறுத்தி மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.
18 சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் வழக்கில் சரியான தீர்ப்பு அல்ல. இது தவறான சட்டத்துக்கு முன் உதாரணமாகும். சட்டத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்பது தான் எங்கள் கருத்து. தலைமை நீதிபதியும், நீதிபதியும் சேர்ந்து வெவ்வேறு கருத்துகளை பரிமாற்றம் செய்து, அது 3-வது பெஞ்சுக்கு போனால், மக்களை திசை திருப்புவதற்காக முடிவு செய்யா முடியாத நிலையில் சட்டம் இருக்கும் என்றால், மக்கள் எப்படி நீதிமன்றத்தை நாடுவது என்பது எங்கள் கேள்வி. நீட் என்பது இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. நீட் தேர்வுக்காக உயிரை மாய்த்து கொள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #johnpandian #18mlas #chennaihighcourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்