search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junior Women's T20 World Cup Cricket"

    • பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
    • இந்திய அணியினருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 68 ரன்னில் சுருண்டது.

    அடுத்து சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. இந்தியாவின் திதாஸ் சாது ஆட்டநாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலகக் கோப்பைபையும் இந்தியா வென்றதில்லை. இந்திய சீனியர் அணி 3 முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் இந்திய இளம் படை, அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த போட்டியை இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா நேரில் சென்று கண்டு களித்தார்.

    இந்நிலையில் வரலாற்று சாதனை படைத்த ஜூனியர் மகளிர் அணிக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தலை வணங்கி வாழ்த்தை தெரிவித்தார். பின்னர் அனைத்து வீராங்கனைகளுக்கு கைகுழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மேலும் இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு பிசிசிஐ செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×