என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை: 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கோலாலம்பூர்:
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வேன் வூர்ஸ்ட் 23 ரன்னும், ஃபே கௌலிங் 15 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் கொங்கடி திரிஷா 3 விக்கெட்டும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா, பருனிகா சிசோடியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை கமலினி 8 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு கொங்கடி திரிஷாவுடன் இணைந்த சானிகா சால்கே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி அசத்தியது. திரிஷா கொங்கடி 44 ரன்னும், சால்கே ஜோடி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.