search icon
என் மலர்tooltip icon

    மலேசியா

    • மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
    • பைக்கை தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பைக் கேட்டு அடம்பிடிப்பது அதிகரித்து வருகிறது.

    செல்லக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பெற்றோரும் தங்கள் மகன்கள் கேட்கும் பைக்கை வாங்கி கொடுக்கிறார்கள்.

    ஆனால் மகன்களோ அந்த பைக்கில் விபரீத சாகசங்கள் செய்து பிரச்சினையில் சிக்கி கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.

    மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த ஷா ஆலம் என்பவர் தனது மகன் ஆசையாக கேட்டார் என்பதற்காக மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது மகனோ அந்த பைக் மூலம் பந்தய போட்டிகளில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டதோடு, வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார்.

    இதனால் மகனின் பாதுகாப்பு பற்றி கவலையடைந்த அவர், மகனுக்கு அறிவுரை கூறி திருத்த முயன்றார். ஆனால் அவரது மகன் தந்தையின் அறிவுரைகளை கண்டுகொள்ளாததால் மகனுக்கு பாடம் புகட்ட ஷா ஆலம் முடிவு செய்தார்.

    அதன்படி ஷா ஆலம் தனது மகனுக்கு ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை அவரே தீ வைத்து எரித்ததோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    அந்த வீடியோ வைரலானதோடு ஷா ஆலமின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய மங்கோலிய வீரர்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
    • இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை படைத்தது.

    கோலாலம்பூர்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. தற்போது இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், சிங்கப்பூர், மங்கோலியா அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்றுப் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சிங்கப்பூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மங்கோலியா வீரர்கள், மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 10 ஓவரில் 10 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற சாதனையை மங்கோலியா சமன் செய்தது.

    சிங்கப்பூர் சார்பில் பரத்வாஜ் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆடிய சிங்கப்பூர் ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    • ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாக குறிப்பிட்டு அவருக்கு திருமண சடங்கு நடத்தி உள்ளனர்.
    • புகைப்படங்கள், வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.

    மலேசியாவை சேர்ந்த ஜிங்ஷன் என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த லீ என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். ஜிங்ஷன் கடந்த 2-ந்தேதி தனது காதலியுடன் பாங்காங்கில் தனது திருமண நாளை கொண்டாடவும், அந்த பயணத்தின் போது காதலியை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 24-ந்தேதி வடமேற்கு மலேசியாவில் பேராக் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் ஜிங்ஷன்- லீ சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், விபத்தில் அவர்கள் மரணம் அடைந்தது இருவரின் குடும்பத்தினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விபத்தில் இறந்த ஜிங்ஷன்- லீயின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, லீ- ஜிங்ஷன் இருவரையும் மறுமையில் கணவன்-மனைவியாக ஒன்றிணைக்கும் வகையில் பேய் திருமணம் என்ற சடங்கை நடத்தி உள்ளனர். பேய் திருமணம் என்பது திருமணம் ஆகாத ஆவிகளை இணைக்கும் ஒரு சடங்கு ஆகும். இதன்படி ஒரு மண்டபத்தில் இறந்த தம்பதியின் புகைப்படத்தை வைத்திருந்தனர். அதில் ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாக குறிப்பிட்டு அவருக்கு திருமண சடங்கு நடத்தி உள்ளனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.

    • மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் வாங் யீயை எதிர்கொண்டார்.

    இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-16 என முதல் செட்டை வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட வாங் யீ அடுத்த இரு சுற்றுகளை 21-5, 21-16 என கைப்பற்றிய சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 88 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசானனை எதிர்கொண்டார்.

    இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 13-21 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து அடுத்த இரு சுற்றுகளை 21-16, 21-12 என கைப்பற்றியதுடன், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 55 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த ஹான் ஹூவை எதிர்கொண்டார்.

    இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக

    ஹான் ஹூ 21-14 என 2-வது செட்டை வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பி.வி.சிந்து 21-12 என கைப்பற்றியதுடன், அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை அஷ்மிதா சலியா காலிறுதிச்சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிவி சிந்து 21-13, 12-21, 21-14 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
    • இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 59 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாவைச் சேர்ந்த சிம் யூ ஜின்னை எதிர்கொண்டார்.

    இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக

    சிம் யூ ஜின் 21-12 என 2வது செட்டை வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிவி சிந்து 21-14 என கைப்பற்றியதுடன், காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.

    பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா 2வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • மலேசியாவில் கடற்படை தினத்தின் போது ஒத்திகை நடந்தது.
    • அப்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் பலியாகினர்.

    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடற்படை தினத்தின் 90-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பெரக் பகுதியில் லுமுட் நகரில் உள்ள கடற்கடை தளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒத்திகையில் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அவைகள் நடுவானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.

    அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டன. ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரில் ரோட்டர் பகுதியை இடித்தது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. பின்னர் அவை தரையில் விழுந்து நொறுங்கின.

    உடனே தீயணைப்பு வீரர்கள், மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை உடல்களை மீட்டனர்.

    இதுகுறித்து மலேசிய கடற்படை கூறும்போது, ஒத்திகை நிகழ்ச்சியின்போது 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காண உடல்கள் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தது.

    மலேசிய கடற்படை தின நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து சம்பவம் அந்நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    • முகம் சுழிக்கும் வகையில் அரை குறை ஆடை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
    • நடன நிகழ்ச்சியால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோலாலம்பூர்:

    அரைகுறை ஆடை அணிந்த ஆண் நண்பர்களுடன் நடனமாடிய மலேசிய பெண் தனது அழகு ராணி பட்டத்தை இழந்து உள்ளார். அவரது பெயர் விரு நிக்காஹ் டெரின்சிப் (வயது 24). இவர் சமீபத்தில் நடந்த மலேசிய அழகு ராணிக்கான போட்டியில் வெற்றி வாகை சூடி சிறந்த அழகி பட்டம் பெற்றார்.

    இந்த நிலையில் இவர் தாய்லாந்து நாட்டுக்கு விடுமுறையில் சுற்றுலா சென்ற இடத்தில் ஆண் நண்பர்களுடன் நடனமாடினார். அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் அரை குறை ஆடை அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான சமூக வலை தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அழகிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளும் பதிவிடப்பட்டன. இதையடுத்து விரு நிக்காஹ் டெரின்சிப்பிடம் இருந்து மலேசிய அழகு ராணி பட்டத்தை திரும்ப பெறுவதாக நிகழ்ச்சி நடத்திய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


    இது தொடர்பாக கடகாண்டு சுன் கலாச்சார சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஜோசப் பைரீன் கிட்டிங்கன் கூறும் போது விரு நிக்காஹ் சாதாரண பெண்ணாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அழகு ராணி பட்டம் வென்றவர்.

    நடன நிகழ்ச்சியால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் எங்கள் முடிவை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.

    இது போன்ற தவறை மீண்டும் யாரும் செய்யாமல் இருக்க இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

    இதனை ஏற்று விரு நிக்காஹ் டெரின்சிப் தான் வாங்கிய அழகு ராணி பட்டத்தை திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

    • ‘பெருந்தமிழ் விருதை’ மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின.
    • 'மகாகவிதை' நூலை படித்து மகிழ்ந்த ஐந்து நிபுணர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    'மகாகவிதை' நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட் வழங்கின.

    கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான 'மகாகவிதை' நூலுக்கு 'பெருந்தமிழ் விருதை' மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின. 

    தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது. பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் 'மகாகவிதை' நூலை படித்து மகிழ்ந்த ஐந்து நிபுணர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    விருதினைப் பெற்றுக் கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

    • புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.
    • ஆசிரியரின் செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான இருக்கைகள் கூட இருக்காது. இதுபோன்ற பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை செலவு செய்வார்கள். ஆனால் மலேசியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் வகுப்பறையில் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அலங்கரித்து உள்ளார்.

    கமல் டார்வின் என்ற அந்த ஆசிரியர், தான் கடினமாக சம்பாதித்ததன் மூலம் கிடைத்த போனஸ் பணத்தில் இந்த செயல்களை செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த ஆசிரியரின் செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • இன்று நடந்த அரையிறுதியில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிக்கு முன்னேறியது.
    • இந்திய பெண்கள் அணி வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறியது.

    சிலாங்கூர்:

    ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் வரலாற்றில் முதல்முறையாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்துள்ளது.

    இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் முதல் சுற்றிலும், இந்தியா 2, 3வது சுற்றிலும், ஜப்பான் 4வது சுற்றிலும் வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்றில் இந்தியாவின் அன்மோல் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். இதன்மூலம் அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

    இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது.

    ×