என் மலர்
விளையாட்டு
X
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறியது இந்திய ஜோடி
Byமாலை மலர்8 Jan 2025 11:08 PM IST
- கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வென்றது.
கோலாலம்பூர்:
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசிய ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தைவானின் லு மிங் சே-டாங்க் கை வே ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 21-10 என இந்திய ஜோடி வென்றது. இரண்டாவது செட்டை தைவான் ஜோடி 21-16 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்திய ஜோடி 21-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
Next Story
×
X