என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்த பிசிசிஐ
Byமாலை மலர்2 Feb 2025 9:51 PM IST
- மகளிர் U19 டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது
- வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
Next Story
×
X