search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallakurichi issue"

    • மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.
    • மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்! என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!

    இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!

    நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்?

    ஏழை எளிய மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

    அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.

    மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! என்று கூறியுள்ளார்.


    • கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்.
    • அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க. அரசை கடுமையாக சாடியுள்ளனர்.

    இந்நிலையில், வரும் 22-ந்தேதி பா.ஜ.க. மாநில தழுவி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, தமிழக பா.ஜ.க. சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

    • மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற தாமதம் செய்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மர்ம மரணம் அடைந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    ஆனால், மாணவியின் தந்தை தரப்பில் டாக்டர்கள் நிய மிக்கப்படாத தால், அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    இதற்கிடையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி டாக்டர்கள் குழு, மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தது. மறுபிரேத பரிசோதனை செய்த உடலை ஸ்ரீமதி பெற்றோரை வாங்கிக் கொள்ள உத்தரவிட கோரி அரசு தரப்பில் ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையிடப்பட்டது.

    அதற்கு அவர் மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்யவேண்டும். அதை படித்து பார்த்து அடுத்தக்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகலை மாணவின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் சங்கரசுப்பு, ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

    அதை நீதிபதி படித்து பார்த்தார். பின்னர், மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பு வக்கீலிடம், இந்த ஐகோர்ட்டு மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? மகளை இழந்த மனுதாரர் ராமலிங்கம் மீது அனுதாபம் உள்ளது. அதற்காக ஐகோர்ட்டு உத்தரவிட்டும் மாணவியின் உடலை பெற தாமதம் செய்வது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    டாக்டர்கள் குழு அமைத்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்ட இந்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்கவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினையை ஏற்ப டுத்தக்கூடாது. அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மகளின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டக்கூடாது. மறுபிரேத பரிசோதனை தொடர்பான உத்தரவில், சுப்ரீம் கோர்ட்டு தலையிடவில்லை. அதனால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவது இல்லை.

    வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை. இந்த வன்முறையால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை யோசித்து பார்க்க வேண் டும். அவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆலோசித்துள்ளார்" என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, மாணவியின் மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடு கின்றனர். அது மனுதாரர் தரப்பிற்கு தெரியாமலேயே நடந்துள்ளது. மாணவி மரணம் தொடர்பாக சமூக ஊடகங்கள் முழுவதும் பொய் செய்தியை பரப்பி உள்ளன. எனவே, மறு பிரேத பரிசோதனை செய்த அறிக்கையை புதுச்சேரியில் ஜிப்மர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை அவர்களிடம் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    மனுதாரர் தரப்பை பார்த்து, மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. எப்போது உடலைப் பெற்றுக் கொள்கிறீர்கள்? உடலை பெற்று கண்ணியமான முறையில் இறுதி சடங்கு நடத்துங்கள். மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகி றேன். அவ்வாறு பெற்றுக் கொள்ளா விட்டால் காவல் துறை சட்டப்படி இறுதி சடங்குகளை நடத்தலாம். எனவே, உடலை எப்போது பெறுவீர்கள் என்ற விவரத்தை இன்று 12 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் ராம லிங்கத்துக்கு உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது தந்தை ராமலிங்கம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    மாணவியின் உடலை நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பெற்றுக் கொள்கிறோம். மாலைக்குள் இறுதி சடங்கு செய்து முடிப்போம்" என்று உத்தர வாதம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    • திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார்.
    • 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டார்.

    முன்னதாக, கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பள்ளியை மீட்கும் நடவடிக்கையாக புதிய ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சூறையாடப்பட்ட பள்ளிக்கான மீட்பு நடவடிக்கை ஒருங்கிணைப்பாளராக ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்.
    • நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

    தமிழகத்தில் வரும் 24-ம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்- 4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    தேர்வுக்கு 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    சட்டம், ஒழுங்கு பிரச்சனையால் தேர்வு நடத்தும் சூழல் இல்லாததால் கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், புதிய தேர்வு மையமாக நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளி, ஏ.கே.டி. நினைவு வித்யாசாகத் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    புதிய தேர்வுக்குகூட நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    ×