என் மலர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
சட்டம், ஒழுங்கு பிரச்சனையால் கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Byமாலை மலர்19 July 2022 1:32 PM IST (Updated: 19 July 2022 3:14 PM IST)
- 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்.
- நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்- 4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வுக்கு 1200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளி மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சட்டம், ஒழுங்கு பிரச்சனையால் தேர்வு நடத்தும் சூழல் இல்லாததால் கனியாமூர் பள்ளி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதில், புதிய தேர்வு மையமாக நீலமங்கலம் ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளி, ஏ.கே.டி. நினைவு வித்யாசாகத் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய தேர்வுக்குகூட நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Next Story
×
X