search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kongunadu Munnetra Kazhagam"

    • ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்.
    • இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.

    கோவை:

    கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பெஸ்ட் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமரானால் ஊழல் இன்றி விவசாயிகள், ஏழை-எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.

    உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறியுள்ளது. பேச்சுத்திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறது.

    இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். பாராளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் மாறி, மாறி வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும், மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தலைமை கழக செயலாளர் பெஸ்ட் சந்திரசேகர், மாநில மாணவர் அணி செயலாளர் கேபிள் தங்கராஜ். மாநகர மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுர்த்தி, மாவட்ட பொருளாளர் நாராயணசாமி,மண்டல நிர்வாகிகள் செந்தில் குமார், ராஜமாணிக்கம், குணசேகரன், ஆட்டோ நாகராஜ், மோகன், செல்வக்குமார் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
    • புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி'அம்மா' ஆகியோர் வகித்த பதவி தங்களுக்கு கிடைத்துள்ளது.

    திருப்பூர் :

    கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் , புரட்சித்தலைவி'அம்மா' ஆகியோர் வகித்த அந்தப் பதவி தங்களுக்கு கிடைத்துள்ளது.அவர்களைப் போலவே தாங்களும் பன்மடங்கு புகழ்பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.

    மேலும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் தங்களுக்கு என்றும் ஆதரவாகஇருக்கும் என்று அன்புடன் தெரிவித்துக்கொண்டு மீண்டும் வாழ்த்துக்களைஎனது சார்பாகவும், கொங்குநாடு முன்னேற்ற கழகம்கழகம் சார்பாகவும்தெரிவித்துக்கொள்கின்றேன்.இவ்வாறு தனது அறிக்கையில் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

    ×