search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna jayanthi"

    • நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
    • ‘மதத்தை கடந்த மனம்’, ‘இந்தியாவின் கலாசார ஒற்றுமை’ போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அன்று பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கிருஷ்ணர், ராதைபோல அலங்காரம் செய்து சந்தோஷப்படுவார்கள். இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அதில் முஸ்லிம் தம்பதி ஒன்று தங்களுடைய மகனை கிருஷ்ணர்போல வேடமிட வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ, 'மதத்தை கடந்த மனம்', 'இந்தியாவின் கலாசார ஒற்றுமை' போன்ற கருத்துகளை பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
    • பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.

    கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அவல் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் -1 கப்

    பொட்டுக்கடலை - 1 கப்

    முந்திரி - 6

    திராட்சை - 6

    ஏலக்காய்ப்பொடி

    பால் - அரை கப்

    சர்க்கரை - 1 கப் நெய்

    தேங்காய்துருவல் - 2 கப்

    செய்முறை:

    அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள். வறுத்த முந்திரியை மேல் தெரிவதுபோல் வைத்து லட்டு பிடித்துக்கொள்ளலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் பிரசாதமாக கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

    • இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • நாட்டு மக்கள் அனைவருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பகவத் கீதையின் வழி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு அளித்துள்ள போதனைகளை ஆழமாக பின்பற்றி, நாட்டில் ஒற்றுமை தழைத்தோங்க செய்து வாழ்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீமத் பகவத் கீதை காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது.
    • அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம்.

    சென்னை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    இந்த மகிழ்ச்சியான திருவிழா, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக மகத்துவத்தையும், ஸ்ரீமத் பகவத் கீதையின் காலத்தால் அழியாத ஞானத்தையும் தழுவுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. கர்ம கோட்பாட்டின்படி நடக்கவும் தேச வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படவும் அனைத்து மனிதகுலத்தின் நலன் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றவும் நமக்குள் உறுதி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம்.
    • எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

    வெல்ல சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். கிருஷ்ண ஜெயந்தியான இன்று நீங்களும் செய்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு- ஒரு கப்

    வெல்லம்-100 கிராம்

    எண்ணெய் - ஒரு கப்

    ஏலக்காய் பொடி- சிறிது

    உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

    வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி

    செய்முறை:

    உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

    மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம்.

    ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவைப் போட்டு அதில் வெல்லத் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கலாம்.

    கிருஷ்ணருக்கு பிடித்தமான வெல்ல சீடை தயார்.

    • மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் சிறப்புக்குரியது.
    • சென்னையில் பல இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்திருந்தது.

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கிருஷ்ணர் சிலைகள், பூஜைக்குரிய பொருட்கள் அமோகமாக விற்பனையானது.

    இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் சிறப்புக்குரியது. தாய்மை, அன்பு, பாசம், காதல் உணர்வுகளை தாங்கி, அன்பு ஒன்றே நிலையானது என்பதை வையகத்துக்கு உணர்த்தும் அவதாரமாகும்.

    கிருஷ்ணரை தங்கள் வீட்டு குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் ஒருமித்து தங்கள் இல்லங்களில் கொண்டாடும் அற்புதமான நிகழ்வு. அத்தகைய சிறப்புக்குரிய கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் பல இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனையாகி வருகிறது. குழந்தை கிருஷ்ணர், ராதையுடன் இருக்கும் கிருஷ்ணர், நண்பர்களுடன் விளையாடும் கிருஷ்ணர், வெண்ணெய் உண்ட கிருஷ்ணர், கோபியர்களுடன் இருக்கும் கிருஷ்ணர், தவிழும் கிருஷ்ணர் என்று பல விதமான உருவங்களில் சிறிய, பெரிய கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு உள்ளது.

    சென்னை புரசைவாக்கம், மயிலாப்பூர், தியாகராயநகர், பாரிமுனை, மூலக்கடை, பெரம்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு உள்ளது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிறிய கிருஷ்ணர் சிலைகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கி சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. இது தவிர பழங்கள், பூக்கள் விற்பனையும் அமோகமாக இருந்தது.

    தோரணம், மாவிலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை ஏராளமானவர்கள் கடை வீதிக்கு வந்து வாங்கி சென்றனர். 

    கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட இருக்கிறது. இன்று காலை 9.15 மணி முதல் மறுநாள் காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது. எனவே கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    சென்னை இ.சி.ஆரில் உள்ள இஸ்கான் கோவிலில் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மகா அபிஷேகமும், பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 27-ந்தேதி (நாளை) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

    கோவில்களை தாண்டி வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. தங்கள் குழந்தையை கிருஷ்ணராக பாவித்து பாதங்களில் மாவிட்டு, நடக்க வைத்து பாதங்களை பதிவு செய்து மகிழ்வார்கள்.

    • ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
    • ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும், தீமைகளை முறியடிக்கவும் உறுதியேற்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தி வருமாறு:-

    உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை ''கிருஷ்ண ஜெயந்தி'' என்றும்; ''கோகுலாஷ்டமி'' என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும், எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    ''நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்; எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை; என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்'' என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறிமுறையினை உலகுக்கு எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

    கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும், தீமைகளை முறியடிக்கவும் உறுதியேற்க வேண்டும். அறம் பிறழ்கின்ற போது, நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும்.
    • குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

    சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர்.

    கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள்.

    மாக்கோலம்

    வீடு முழுவதும் மாக்கோலம் போடுவது சிறப்புடையதாகும். குறிப்பாக, குழந்தை கண்ணனின் பாதங்களை வரைவது மிகவும் முக்கியமானது.

    வீட்டின் வாயிற்படியிலிருந்து பூஜை அறை வரை கண்ணனின் பிஞ்சு சேவடிக் கமலங்களை மாக்கோலமாக இடுவார்கள்.

    கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லந்தோறும் சென்று வெண்ணெயைத் திருடித் தின்னும்போது, வீடு முழுவதும் வெண்ணெய் சிதறிக் கிடக்கும்.

    அவனது கமலப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடுகள் முழுவதும் நிறைந்திருக்கும்.

    இந்த நினைவுச் சின்னமாகவே மாக்கோலத்தால் வரையப்பட்ட மாக்கோலங்கள் திகழ்கின்றன.

    • அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.
    • சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார்.

    உறி ஒன்றில் சட்ட ஒன்றைக் கட்டி வைத்து கயிற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். கம்பால், உறியில் உள்ள சட்டியைத் தட்டி உடைக்க வேண்டும்.

    அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.

    அப்போது பெண்கள், உறியை அடிக்க முயற்சி செய்யும் இளைஞர்களின் மீது தண்ணீரை ஊற்றித் தடை செய்ய முயற்சிப்பார்கள்.

    சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார். அவருக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

    விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் நடைபெறும். இது, கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்ச்சியை நினைவு கூறவே.

    • அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.
    • வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    கிராமங்களில், கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள்.

    அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள்.

    வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும்.

    இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது, பெண்கள் தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள்.

    எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும்.

    தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

    • பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.
    • யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும்.

    கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் `விரஜபூமி'யில் உள்ளன.

    `பிருந்தா' என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான்.

    பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

    பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன.

    கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

    பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.

    யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும்.

    கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி, ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

    இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள்.

    தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

    மதுராவிற்கு சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

    • பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
    • கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்கள் இவை.

    கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் ெபருமை அளவிடற்கரியது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத் திருத்தலம் அமைந்துள்ளது.

    பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

    கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்கள் இவை.

    வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது.

    சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன.

    இந்த `விரஜபூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

    இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு.

    இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர்.

    உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

    பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற ேபாதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள்.

    கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள்.

    ெபரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

    ×