என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kuradir Camp"
- இதில் 50 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.
- தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது.
இம்முகாமில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, காவல்துறை ஆய்வாளர்கள் கலைவாணி, மகாலெட்சுமி, உதவி ஆய்வாளர்கள் சேகரன், உமாபதி போலீசார் மற்றும் பொதுமக்கள் ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.
- குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
- மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்பு டைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில் 452 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு 3சக்கர கை மிதிவண்டியினை கலெக்டர் பழனி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- ஏப்ரல் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான வருகிற 8-ந்தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-இன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை அளித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்