search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laksharchana ceremony"

    • லட்சார்ச்சனை விழா 26-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது

    உடுமலை : 

    உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் 48-வது ஆண்டு சுதர்சன ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை விழா 26-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக 26 -ந் தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை, மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனை, இரவு 7 மணிக்கு அக்னி பிரதிஷ்டை ஹோமம், இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளது. 27-ந்தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனையும், 10 மணிக்கு சுதர்சன ஹோமம், 12.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு லட்சார்ச்சனை, 8 மணிக்கு சுதர்சன ஹோமம், தீபாராதனை, 9 மணிக்கு தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது.28-ந் தேதி காலை 6.30 மணிக்கு நித்ய திருவாராதனம், காலை 8 மணிக்கு லட்சார்ச்சனை, 9 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி, 11 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன அபிஷேகமும் தீபாராதனையும் தீர்த்த பிரசாதமும் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு புதிய வெள்ளிக்கவசம் சாத்துப்படி சேவையும் தீபாராதனை உபசாரம், இரவு 9 மணிக்கு சர்வதரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    கோபிசெட்டிபாளையம் கடைவீதி சாரதா மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

    கோபிசெட்டிபாளையம் கடைவீதி சாரதா மாரியம்மன் கோவிலில் 26-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா, 1008 சங்காபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேக 12-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜை 10 மணிக்கு லட்சார்சணை தொடங்கியது. பகல் 1 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று 10 தேதி காலை 8 மணிக்கு 1008 சங்குகள் பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணியளவில் 1008 சங்க அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு லட்ச்சார்சனை நிறைவு பெற்றது.

    இதையொட்டி மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோபி,கரட்டூர், மேட்டுவளவு, வெள்ளாளபாளையம், மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    ×