search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land-grabbing case"

    • கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர். ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    வருகிற 31 ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரத்தில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு, கேரளா விரைந்த சிபிசிஐடி போலீசார் அம்மாநிலத்தில் வைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தனர்.

    • முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த நிலமோசடி வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் 15 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், கேரளாவில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழக சிபிசிஐடி போலீசார் கேரளாவிற்கே சென்று கைது செய்துள்ளனர்.

    இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த அவரது எக்ஸ் பக்க பதிவில், "கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் என்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.

    அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், அவரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சென்னை, ஜூலை. 16-

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கரூர் மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப் பதிவு செய்து விட்டதாகவும், இதுபற்றி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் போலீஸ் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர்.

    இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளை யில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர்.

    அரசியல் முன் விரோதத்தில் பொய் புகார் அளிக்கப் பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    ஏற்கனவே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகி இருந்த நிலையில் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜய பாஸ்கரை தேட தொடங்கினார்கள். இதை அறிந்ததும் விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவர் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. ஒரு மாதமாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீசார் கரூருக்கு அழைத்து வருகிறார்கள்.

    • நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட குற்றபிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • நிலமோசடி வழக்கில் ஆஜராகாத பெண் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அஸ்வந்த் கண்ணா (வயது34). இவருக்கு சொந்தமான நிலத்தை திண்டுக்கல் மூக்கன் ஆசாரி சந்தை சேர்ந்த ராஜேந்திரன் தனது மகள்களான அனிதா, கண்மணி, மகன் வீரப்பன் மற்றும் உறவினர் ஆகியோருக்கு விற்பனை செய்தார்.

    இந்த நிலத்துக்கான பணத்தை அஸ்வந்த்க ண்ணாவுக்கு வழங்கியது போல ராஜேந்திரன் போலி ரசீது தயாரித்து வழங்கினார். தன்னிடம் நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அஸ்வந்த்கண்ணா மாவட்ட குற்றபிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்-2 கோர்ட்டில் நடந்தது. விசாரணைக்காக ராஜேந்திரன், அனிதா, வீரப்பன் உள்பட 5 பேர் ஆஜர் ஆன நிலையில் கண்மணி என்பவர் மட்டும் ஆஜராகவில்லை. இதனையடுத்து கண்மணியை ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட் மீனாட்சி உத்தரவிட்டார்.

    ×