search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lock to the temple"

    • கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

    கடலூர்

    விருத்தாசலம் அருகே மருங்கூர் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 5 ஆண்டு களுக்கு முன் கும்பாபிஷேகம் காரணமாக திருப்பணி தொடங்கியதால், தற்காலிகமாக திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் பாரம்பரிய முறைப்படி, 7 உபயதாரர்கள் தலைமையில் திருவிழா நடக்கும் என கூறினர். ஆனால் அதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக 18 உபயதாரர்களை நியமித்து அவர்கள் தலைமையில் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், தீமிதி திருவிழா நடத்துவதற்காக காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்த மின்விளக்குகள், ஒலிப்பெருக்கிகள் ஆகி யவற்றை பொருத்திவிட்டு தர்மகர்த்தா சேதுபதி தரப்பினர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால் 7 உபயதாரர்கள் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த வசந்தன் தரப்பினர் பூட்டின் மேல் மேலும் பூட்டை போட்டு கோவிலை பூட்டினர். இதனால் இருதப்புக்குமிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான போலீசார் இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சிதம்பரம் சப் -கலெக்டர் அலுவலகத்தில் அமைதிக்கூட்டம் நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அதுவரை இரு தரப்பினரும் கோவிலை திறக்க கூடாது என போலீசார் கூறினர். இதனை ஏற்ற அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், விஜயகுமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்

    ×