search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LPG cylinder"

    • கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.

    செப்டம்பர் 9ம் தேதி கான்பூர்-காஸ்கஞ்ச் வழித்தடத்தில் பயணித்த காளிந்தி எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்து கேஸ் சிலிண்டருடன் மோதியது. இதைத் தொடர்ந்து பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதால், ரெயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

    இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்டவாளம் அருகே எல்பிஜி சிலிண்டர், பெட்ரோல் பாட்டில் மற்றும் தீப்பெட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

    • தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?
    • சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி!

    சமையல் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வரும் என மத்திய அரசு நேற்று திடீரென அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில்தான் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளையொட்டி இது பெண்களுக்கு மோடி அரசு அளிக்கும் பரிசு. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாலும், இன்னும் மூன்று மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், ஆறு மாதங்களில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதை கருத்தில் கொண்டு விலையை குறைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களை எம்.பி.யும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?

    சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி!

    ரூ. 1100-க்கு மேல் விலை வைத்து மக்களை கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!

    வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • 9.5 ஆண்டுகள் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை கொள்ளை அடித்த மோடி அரசு
    • தற்போது தாய், சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்டி வருகிறது

    கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி, இரண்டு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது ஆகியவற்றின் காரணமாக, பா.ஜனதா அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. பிரதமர் மோடி, அவருடைய நாற்காலியில் ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் மேலும் சலுகைகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் ''மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்த கருணையற்ற மோடி அரசு தற்போது தாய், சகோதரிகள் மீது போலியான நல்லெண்ணத்தை காட்டி வருகிறது.

    200 ரூபாய் மானியம் வழங்குவதன் மூலம் 2024 பாராளுமன்ற தேர்தலில் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை மோடி அரசு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுவது நல்லது மோடி ஜி. பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பினால்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

    மோடியால் திடீரென சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இப்போது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்?.

    இரண்டு முறை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வெற்றிகரமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். 3-வது கூட்டம் அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

    கர்நாடகா அரசு 100 நாட்களுக்குள் ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான் அரசு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

    ஐந்து மாநில தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், உறுதியான தோல்வியை பா.ஜனதா பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் மக்களை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும் நிலையில்,  திருப்தியற்ற நிலையில் இருக்கிறது. பிரதமர் நாற்காலியில் மோடி ஒட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார். இதனால் இதுபோன்ற பரிசுகளை இன்னும் எதிர்பார்க்கலாம்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு கடந்த 9.5 ஆண்டுகளாக 31.37 கோடி மக்களிடம் சிலிண்டர் விலையை உயர்த்தி கொள்ளை அடித்துள்ளது. அதுவும், 8.33 லட்சம் கோடியை மக்கள் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்துள்ளது.

    உஜ்வாலா திட்டத்தில் பயனடையும் பெண்கள் பாக்கெட்டில் இருந்து, 2017-ல் இருந்து 68,702.76 கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கி மோடி அரசு நினைவு கூர்ந்துள்ளது.

    மோடி ஜி, 9.5 ஆண்டுகள் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த 8,33,640.76 ரூபாயை இந்த 200 ரூபாய் மானியத்தால் இன்னும் சில மாதங்களில் ஈடுகட்ட முடியுமா?. 68,702.76 கோடியை கொள்ளையடித்த உஜ்வாலா சகோதரிகளுக்குப் பிராயச்சித்தம் செய்வீர்களா?.

    2024 தேர்தலில் நாட்டு மக்கள் நிச்சயமாக உங்களை அதிகாரத்தில் இருந்து இறக்கி, நீங்கள் கொடுத்த பரிசை, இதன் மூலம் திருப்பி கொடுப்பார்கள்" என்றார்.

    • மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.410க்கு விற்கப்பட்டடதாக அசோக் கெலாட் பேச்சு
    • ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், 'ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வகைப்படுத்தப்படும். பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு  அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். மேலும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படும்' என்றார்.

    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு வரை ரூ.410க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், இப்பாது ரூ.1,040க்கு விற்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.

    ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஏழைகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    வினியோகஸ்தர்கள் கமிஷன் அதிகரிப்பால், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. #LPG #Cylinder
    புதுடெல்லி:

    வீட்டு உபயோகத்துக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மானிய தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

    இந்த நிலையில், வீட்டு உபயோகத்துக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான வினியோகஸ்தர் (ஏஜென்சி) கமிஷன் தொகையை 50 ரூபாய் 58 காசாகவும், 5 கிலோ சிலிண்டருக்கான கமிஷன் தொகையை 25 ரூபாய் 29 காசாகவும் பெட்ரோலிய அமைச்சகம் அதிகரித்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையை நேற்று 2 ரூபாய் உயர்த்தி இருக்கின்றன.

    இந்த விலை உயர்வை தொடர்ந்து சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மானியம் நீங்கலாக ரூ.495.39 ஆக அதிகரித்து இருக்கிறது. இதேபோல் டெல்லியில் ரூ.505.34 ஆகவும், மும்பையில் ரூ505.05 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.510.70 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து செலவை பொறுத்து இந்த விலையில் சிறிது மாற்றம் இருக்கும்.

    இதுபற்றிய அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன.

    கடந்த 1-ந் தேதி ஏஜென்சி கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் 14.2 கிலோ எடையுள்ள கியாஸ் சிலிண்டரின் சந்தை விலை ரூ.60 அதிகரித்து ரூ.939 ஆனது. தற்போது இந்த விலை ரூ.942.50 ஆக உயர்ந்து இருக்கிறது. 
    வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு ரூ.62.50 உயர்ந்துள்ளது. #GasCylinder
    சென்னை:

    சமையல் கியாஸ் விலை மாதம் தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

    மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏற்கனவே ரூ.896 ஆக இருந்தது. அதன் விலை இன்று முதல் ரூ.958.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சிலிண்டருக்கு ரூ.62.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.491-ல் இருந்து ரூ.499.39 ஆக அதிகரித்துள்ளது. அதாவது சிலிண்டருக்கு ரூ.3.39 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


    வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு இன்று முதல் முன்பதிவு செய்வோர் ரூ.958.50 செலுத்தி சிலிண்டரை பெற வேண்டும். அவர்களின் வங்கி கணக்கில் ரூ.464.11 மானியம் தொகை செலுத்தப்படும். #GasCylinder
    சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. #LPGPriceHike
    புதுடெல்லி:

    சமையல் எரிவாயு சிலிண்டர் அத்தியாவசியங்களில் ஒன்றாகிவிட்டது. இதன்விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    மாதந்தோறும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று சமையல் எரிவாயுவின் விலை 1 ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. #LPGPriceHike
    மும்பையில் கலம்பொலி பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சோஹன் பாபன் கட்கே என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #cylinderblast
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்பொலி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் இன்று காலை சமைப்பதற்காக ஒரு பெண் எரிவாயு சிலிண்டரை பற்றவைத்த போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சரிந்தது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் அவரது மகன் சோஹன் பாபன் கட்கே (வயது 5) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பாகவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #cylinderblast
    ×