என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "LPG cylinders"
- ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.
- ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு இந்தியா அணிக்காக அறிமுகமான ரின்கு சிங், சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் அவர் கடந்த ஆண்டு இந்தியா அணியில் இணைந்தார்.
இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 11 இன்னிங்ஸ்களில், 356 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 89.00 மற்றும் 176 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு அரை சதங்களுடன் எடுத்துள்ளார்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் அவரது தந்தை கான்சந்த் சிங் எல்பிஜி சிலிண்டர்களை டெலிவரி செய்யும் வீடியோ வைரலானது. கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற போதிலும், தனது தந்தை வேலையை விட்டு விட மறுத்தாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் என் தந்தையிடம் நம்மிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் சிலிண்டர்களை எடுத்துச் செல்லாமல் ஓய்வெடுக்கச் சொன்னேன். ஆனால் அவர் அதைச் ஏற்க மறுத்து விட்டார். மேலும் அவரது வேலையை அவர் விரும்புகிறார்.
ஒருவர் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டிருந்தால் அவரிடம் வேலையை விட்டுவிடுங்கள் என்று சொல்வது மிகவும் கடினம். அவரே நினைத்தால் மட்டும்தான் அதை விட முடியும்.
இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.
- கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- ரூ.1000 வரை உயர்த்தி விட்டு ரூ.200 குறைத்திருக்கிறார்கள். மேலும் குறைத்தால் நன்றாக இருக்கும்.
சென்னை:
பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.
2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.
கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக்கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகையை கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.
இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சென்னையில் ரூ.1118.50 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.918.50 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 915 ஆக இருந்துள்ளது. அதன் பின்னர் விலையேறிக்கொண்டே சென்ற நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் சென்று ரூ.918 ஆக குறைந்திருக்கிறது.
இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-
சூளைமேடு கீதா: கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே எங்கள் வீட்டில் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி வருகிறோம். எனக்கு சிறு வயதாக இருக்கும்போது 30 ரூபாய் கொடுத்து எனது தாய் சிலிண்டர் வாங்கி இருக்கிறார். இப்படி குறைவான தொகையை கொடுத்தே வாங்கப்பட்ட சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ஆயிரத்தை தாண்டியதால் வருமானத்தில் பெரும் பகுதியை சிலிண்டருக்கே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. 200 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த பணம் நிச்சயம் சேமிப்பாகி வேறு ஒரு செலவுக்கு பயன்படும். இந்த விலை குறைப்பு மகிழ்ச்சி அளித்துள்ள போதிலும் இன்னும் குறைத்தால் நன்றாக இருக்கும். மேலும் 200 ரூபாய் குறைக்கலாம்.
மாங்காடு காயத்ரி: கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே மாறி இருந்தது. இதனால் சிலிண்டர் விலை குறையுமா? என்று அனைத்து பெண்களுமே எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது தான்.
ரூ.1000 வரை உயர்த்தி விட்டு ரூ.200 குறைத்திருக்கிறார்கள். மேலும் குறைத்தால் நன்றாக இருக்கும்.
பிரேமலதா: சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 70 ரூபாயாக இருந்த நாளில் இருந்தே சிலிண்டரை பயன்படுத்தி வருகிறோம். சிறிது சிறிதாக சிலிண்டர் விலையை உயர்த்தி 1000-க்கும் மேல் கொண்டு சென்று விட்டனர். தற்போது அதனை 200 ரூபாய் குறைத்திருப்பது நல்ல விஷயம்தான். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி விலையை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார்.
- நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.
டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை பிரதமர் மோடி அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு அளித்ததுடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உஜ்வாலா சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம், மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாகப் பெறுவார்கள்.
இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 503- ல் கூறிய ஊழல் திமுக, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசு
புதுடெல்லி:
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்காக இந்த பரிசை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் அனைத்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 200 குறைக்கப்படுகிறது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்