என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Married couple"
- இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
- 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.
பெங்களூரு:
கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இவர்கள் 2 பேரும் காதலித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.
இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மணக்கோலத்தில் இறங்கிய மணமகன் மற்றும் மணமகள் கழுத்தில் மாலையுடன் விறுவிறுவென அரசு மதுபானக் கடைக்கு சென்றனர்.
- தம்பதி இருவரும் மதுபானம் வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியினர் கோவிலுக்கோ அல்லது மறுவீட்டிற்கோ செல்வதை தான் நாம் வழக்கமாக பார்த்திருப்போம்.
ஆனால், கேரளாவில் புதுமணத் தம்பதி திருமணம் முடிந்த கையோடு நேராக அரசு மதுபானக் கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்று அனைவரையும் வியப்படைய வைத்தனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் காரில் இருந்து மணக்கோலத்தில் இறங்கிய மணமகன் மற்றும் மணமகள் கழுத்தில் மாலையுடன் விறுவிறுவென அரசு மதுபானக் கடைக்கு சென்று இருவரும் மதுபாட்டில்களை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்.
தங்களது திருமணம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுமணத் தம்பதி மதுபானக் கடைக்கு சென்றது சற்று விசித்திரமாகவே இருந்தது.
மணக்கோலத்தில் தம்பதி இருவரும் மதுபானம் வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
- இரு வீட்டாருடனும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை.
- திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக மணமகன் வீட்டார் உறுதி அளித்தனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஹேமகுமார் (வயது24) என்பவரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வினிதா(வயது21) என்ற இளம் பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி, ஐயர் கண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் இன்று முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், ஆரணி காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையிலான போலீசார் இரண்டு வீட்டாருடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடந்து மணமகன் ஹேமகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது மகனின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர் திருமண ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இப்பிரச்சினையால் ஆரணி காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்