search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayuranathar Temple"

    • குடமுழுக்கு செப்டம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடத்தப்பட உள்ளது.

    மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பார்வதிதேவி மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து தனது சாபம் நீங்க பெற்ற தலம் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை. இங்கு புகழ்பெற்ற மாயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் குடமுழுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த குடமுழுக்கையொட்டி அபயாம்பிகை அம்பாள் மற்றும் மாயூரநாதர் சாமிக்கு 33 குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைத்து வேள்வி நடத்தப்பட உள்ளது. இதற்கான யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. பூஜைகளை திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிராயன் சாமிகள் முன்னிலையில், சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.

    இதில் முகூர்த்த பந்தக்காலுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்து பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் மாயூரநாதர் கோவில் தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி பெருந் திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் சிம்மன், காமதேனு, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவில் நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வருகிற 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. மாயூரநாதரும், அஞ்சல்நாயகியும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். நூற்றுக் கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

    இதை யொட்டி ராஜபாளையம்-மதுரை சாலையில் பெத்தவ நல்லூர் பகுதியில் நிறுத்தப் பட்டுள்ள தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேகவருமான ராமராஜ் மற்றும் சங்கத்தினர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். சீரமைக்கும் பணியில் தேர் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

    ×