search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mechanic death"

    • படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார்.
    • முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சென்னை வளசரவாக்கம் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 44). இவர் படகு மெக்கானிக்காக இருந்து வந்தார். இந்த நிலையில் கடலூர் முதுநகர் உப்பனாற்றில் படகில் சில நாட்களாக தங்கிவேலை செய்து வந்தார். சம்பவத்தன்று படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று தவறி ஆற்றில் விழுந்து முழ்கினார். அப்போது ஷேக் அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே மனைவி கண் முன் மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 28). மெக்கானிக்காக இருந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி.

    கணவன் மனைவி 2 பேரும் சிலமலையில் உள்ள சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்க சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    சங்கராபுரம் கூட்டுறவு வங்கி எதிரே வந்த போது சரவணன் என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் செல்லையா தனது மனைவி கண் முன்னே துடிதுடித்து இறந்தார்.

    படுகாயமடைந்த சரவணன் போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் மணிமாறன் (வயது29). மெக்கானிக்கான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையையொட்டி மணிமாறன் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மேலக்கோட்டை பெரியார் காலனி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மணிமாறன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மணிமாறன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருத்தாசலம் அருகே காரில் பழுது பார்த்து கொண்டிருந்த மெக்கானிக் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த பரவளூரைச் சேர்ந்தவர் சீனுவாசன் (43). மெக்கானிக்கான இவர் பரவளூர் பஸ் நிறுத்தத்தில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவர் தன்னுடைய கடையின் முன்பு காரில் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சீனுவாசன் மீது மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த சீனுவாசன் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்தார். அங்கு சிகிச்சைப்பனின்றி இறந்தார். 

    புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூரில் மெக்கானிக் ஒருவர் பறவை காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள முதலிபாளையம் ஊராட்சி மாணிக்காபுரம்புதூரை சேர்ந்தவர் செல்வம் என்கிற முருகசாமி (வயது 58). மெக்கானிக்கல் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 2-ந் தேதி முருகசாமிக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்து வந்தது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காய்ச்சலும், சளியும் அவருக்கு குணமாகவில்லை.

    இதையடுத்து முருகசாமி, ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போதும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அங்கு அவருடைய ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தபோது அவர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகசாமி இறந்தார். திருப்பூரில் மெக்கானிக் ஒருவர் பறவை காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கி, அவர்களின் உயிர்களை காவு வாங்கும் நிலையில், தற்போது பறவை காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதார பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    அசோக் நகரில் தண்ணீர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மெக்கானிக் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சென்னை கொளத்தூர் பகவதி அம்மன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணா துரையின் மகன் ஆனந்தன் (29) கிண்டி கார் சர்வீஸ் சென்டரில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். ஆனந்தன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அசோக் நகர் நோக்கி வடபழனி நூறடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஆனந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தன் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற தண்ணீர் லாரியை கண்டறிய வடபழனி 100 அடி சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×