என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Melappalayam"
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் மேலப்பாளை யம் சந்தையும் ஒன்றாகும்.
இந்த சந்தையில் ஆடு களுடன் மாடுகள், கோழிகள், கருவாடுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மேலப்பாளை யம் கால்நடை சந்தைக்கு தென் மாவட்டத்தை சேர்ந்த வர்களும், கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் வருவார்கள்.
இதற்காக ஆயிரக்கணக்கான ஆடு களும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகும் ஆட்டுச்சந்தையில் பண்டிகை மற்றும் கோவில் திருவிழா நாட்களில் மேலும் அதிகமாக விற்பனை செய்யப்படும்.
தற்போது திருவிழா காலம் என்பதால் கோவில் கொடை விழாக்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடுகள் பலி கொடுத்து வழிபடுவது வழக்கம். இதற்காக இன்று ஏராளமான ஆடுகள் மேலப்பாளையம் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
இன்று ஒரே நாளில் ஆடுகள், கோழிகள் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வந்தது. இதனை ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
இதனால் இன்று மேலப்பாளையம் சந்தை களை கட்டி காணப்பட்டது.
- அம்பை சாலை, ஆசாத் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- 3 நாட்களுக்கு முன்பாகவே அனைத்து கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் கடந்த சில நாட்களாக வண்ணார்பேட்டை மேம்பாலத்தை சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று மேலப்பாளையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர், மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அம்பை சாலை மற்றும் ஆசாத் ரோட்டில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், கடையின் முகப்பு கூரைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது.
இதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் சார்பில் அனைத்து கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சாலையில் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்பு–களை தாமாக முன் வந்து அகற்றி விடுமாறு மைக் மூலமும் அனைத்து கடைக்காரர்க–ளுக்கும் ஏற்கனவே அறிவிப்பு கொடுக்க–ப்பட்டி–ருந்ததால் பெரும்பாலான கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிர–மிப்புகளை அகற்றினர்.
எனினும் இதுவரை அகற்றப்படாத ஆக்கிரமிப்பு–களை இன்று நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஒரு சில கடைகளில் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது.
இந்த பணியின் போது மாநகராட்சி பொறியாளர் நாராயணன், செயற்பொறியாளர் நாகராஜன், அபூபக்கர், மண்டல உதவி கமிஷனர் அய்யப்பன், மண்டல சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் பலர் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
- மேலப்பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதிகளான மேலப் பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் அடிக்கடி தடங்கல் ஏற்படுகிறது.
இவ்வாறு குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை மாற்றுவதற்காக தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டி னை போக்குவதற்கு நிரந்திர தீர்வாகவும் சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலை யத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பழைய பிரதான குழாய்களை அகற்றி அங்கு புதிதாக குழாய் அமைப்பதற்காக ரூ.8.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மேலப்பாளை யம், பாளை விரிவாக்க பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்க தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் நிரந்தர தீர்வாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சேவியர் காலனி குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியில் இருந்து மகிழ்ச்சிநகர் மற்றும் ஆசிரியர்காலனி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மகிழ்ச்சிநகர்,என்.ஜி.ஓ. 'பி' காலனி, எழில்நகர், திருமால்நகர், பெருமாள்புரம் சி காலனி, குமரேசன் காலனி,கனரா பேங்க் காலனி,பி.ஏ.பிள்ளை நகர் (தியாகராஜநகர்),எல்.கே.எஸ். நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் உள்ள 12 குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மத்திகள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மாநகராட்சி குடிநீர் விநியோக வால்வு களை மாநகராட்சி சம்பந்தமில்லாத நபர்கள் யாரேனும் இயக்கினால் அவர்கள் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- விருதுநகர் வாலிபருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
- சிகிச்சை முடிந்து வெளியே வந்த வாலிபரை காணவில்லை.
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள நரிக்குடி வடக்கு காலனியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் வினோத்(வயது 20). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. அதற்காக சிகிச்சை அளிப்பதற்கு அவரது தாத்தா தேவராஜ்(62) என்பவர் சமீபத்தில் வினோத்தை நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை முடித்துக்கொண்டு 2 பேரும் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தனர். அப்போது திடீரென வினோத் மாயமானார். இதுதொடர்பாக தேவராஜ் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றி மின்பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்.
நெல்லை:
நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலப்பாளையம் ெகாட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம்,
அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், அண்ணா வீதி, ஆசாத் ரோடு, சிவந்திபட்டி, மகாராஜநகர், தியாகராஜநகர், கொடிக்குளம், முத்தூர், உழவர் சந்தை, பாளை ரெயில் நிலையம், பெருமாள்புரம், பொதிகை நகர், அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், புதிய பஸ் நிலையம்,ரெட்டியார்பட்டி, டக்கம்மாள்புரம், கொங்கந்தான்பாறை,
பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்ேடரி, தாமரை செல்வி உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றி மின்பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்