search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்- வியாபாரிகள் வாக்குவாதம்

    • அம்பை சாலை, ஆசாத் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • 3 நாட்களுக்கு முன்பாகவே அனைத்து கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் கடந்த சில நாட்களாக வண்ணார்பேட்டை மேம்பாலத்தை சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது.

    இந்நிலையில் இன்று மேலப்பாளையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர், மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    அம்பை சாலை மற்றும் ஆசாத் ரோட்டில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், கடையின் முகப்பு கூரைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது.

    இதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் சார்பில் அனைத்து கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் சாலையில் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்பு–களை தாமாக முன் வந்து அகற்றி விடுமாறு மைக் மூலமும் அனைத்து கடைக்காரர்க–ளுக்கும் ஏற்கனவே அறிவிப்பு கொடுக்க–ப்பட்டி–ருந்ததால் பெரும்பாலான கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிர–மிப்புகளை அகற்றினர்.

    எனினும் இதுவரை அகற்றப்படாத ஆக்கிரமிப்பு–களை இன்று நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஒரு சில கடைகளில் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடைபெற்றது.

    இந்த பணியின் போது மாநகராட்சி பொறியாளர் நாராயணன், செயற்பொறியாளர் நாகராஜன், அபூபக்கர், மண்டல உதவி கமிஷனர் அய்யப்பன், மண்டல சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் பலர் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×