என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Members enrollment"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளார்
- தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க், ஆயில் நிறுவனம் என 4 பெரிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் போல்டன்புரத்தில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கப்ரேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி உள்ளார். தமிழில் கல்வி படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பர்னிச்சர் பார்க், டைட்டல் பார்க், ஆயில் நிறுவனம் என 4 பெரிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்கள் உட்பட பலருக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கல்வி தரம் உயருவதற்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு கூறியுள்ள கருத்துக்களை ஏற்றுத் தான் கல்விக்கட்டணம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்-அமைச்சரின் பணிகள் எல்லோராலும் பாராட்டப்படுகின்றன.
திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை கொண்டதாகும். இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தி.மு.க. மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தொகுதிக்கு புதிதாக 10 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் பலனாக சட்டமன்ற தேர்தலின்போது நல்ல மாற்றம் கிடைத்தது.
20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். மற்ற மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை செயலாளர் பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதிப், இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் பெருமாள், மாநகர விவசாய அணி அமைப்பாளர் தேவதாஸ், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் சுந்தர், செல்வின், கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, விஜயலெட்சுமி, கண்ணன், ஜெயசீலி, வட்ட செயலாளர்கள் செல்வராஜ், கங்காராஜேஷ், மூக்கையா, சுரேஷ், வட்ட பிரதிநிதிகள் ரஜினி முருகன், பாஸ்கர் மற்றும் மணி, மகேஸ்வரன்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலரும், வட்ட செயலாளருமான செல்வராஜ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்