search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Michael Bracewell"

    • இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
    • இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.

    இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் விலகியுள்ளார்.

    ஆல்-ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு தனது அகில்லெஸ் தசைநார் சிதைந்ததால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து டி20 ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக விளையாடிய போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது.


    இந்நிலையில் பிரேஸ்வெல் அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு நாளை செல்ல இருக்கிறார். அதன் பிறகு அவர் நீண்டநாள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலக கோப்பையை அவர் தவறவிடுவார்.

    ஐபிஎல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரேஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
    • ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

    180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

    இந்த போட்டியில் மைக்கெல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். 13 வது ஓவரை வீசிய பிரேஸ்வெல் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. 2-வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் மார்க் அடேர் 4-வது பந்தில் மெக்கார்த்தி 5-வது பந்தில் யங் ஆகியோர் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.


    இதன் மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த நியூசிலாந்து வீரர்களில் 3-வது வீரராக பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரராக ஜேக்கப் ஓரம் 2-வது வீரராக டிம் சவுத்தியும் உள்ளனர்.

    ×