என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Periyasamy"
- தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியசாமி சார்பில், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
- வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை.
சென்னை:
கடந்த 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.
புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை. சந்தை விலைக்குதான் விற்கப்பட்டது.
இதற்கு அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வழக்கு தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை. புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து, உத்தரவிட்டுள்ளார்.
- குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது.
- கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும்.
திண்டுக்கல்:
தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முப்பெருந்துறையில் அமைச்சராக பதவி வகித்தார். தற்போது கூட்டுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார். இதனையடுத்து ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறையில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கமாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது.
பெரும்பாலான அமைச்சர்கள் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவு செய்த கருத்துகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து எந்த கருத்துகள் தெரிவித்தாலும் புன்னகையோடு கடந்து செல்வார். எந்தவித பந்தா இல்லாத மிக எளிமையான மனிதர். உங்களை போலவே உங்கள் மனைவியும் மிகவும் எளிமையானவர். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் உங்களுடன் புகைப்படம் எடுக்க ஆசையாக ஓடி வருவோம். அப்போது அன்புடன் அழைத்து உபசரிப்பீர்கள். எங்கள் மகனுக்கு ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார். ஆதவன் சென்னைக்கு வருவதே உங்களை பார்க்கத்தான், கொரோனா காலத்தின்போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும், தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான்.
குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். நீங்கள் தமிழகத்தின் மந்திரியாக வரும் காலத்தில் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவை கட்சியினர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
- மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது.
- மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
ராயபுரம்:
சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோவில் தெரு அருகே உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கூட்டுறவு சங்க தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் மகளிர் சுயஉதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 57 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-
மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை தருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய கூட்டுறவு வங்கியும் பெண்களுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ளது
மொத்தத்தில் 99.5 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதியானவராக யார் இருந்தாலும் அரசின் நலத்திட்டங்களையும், அதன் பயன்களையும் பெற்றுக்கொள்ளலாம், மாநில அரசு வெளிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது யார் வேண்டுமானாலும் எங்கள் திட்டங்களை ஆய்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூட்டுறவு துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பதிவாளர் சண்முக சுந்தரம், மேலாண்மை இயக்குனர் அமலதாஸ், ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளையஅருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்படும்.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால விதிமுறை ஊதியத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள்
திண்டுக்கல்:
தமிழகத்தில் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 4403 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர், எடையாளர் ஆகிய 2 பணிகளுக்கு தேர்வு செய்வதற்காக கூட்டுறவுத்துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விற்பனையாளருக்கு ரூ.8500 சம்பளம், எடையாளருக்கு ரூ.6500 சம்பளம் தொகுப்பூதியம் மூலம் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளது. இட ஒதுக்கீட்டின் பேரிலும் சமூக நீதி அடிப்படையிலும் சமமாக எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால விதிமுறை ஊதியத்தின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள். இது கடைசி மட்ட பணி என்பதால் கூட்டுறவுத்துறை மூலம் தேர்வு நடைபெறுகிறது. இந்த பணி நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்காது. வருவாய்த்துறை, சிவில் சப்ளை அதிகாரிகள் கூட்டுறவுத்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் சார்பில் தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது.
- யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேசன்தாரர்கள் பொருட்கள் வாங்க வரும்போது கூடுதலாக சோப்பு, அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேசன் கடைகளிலும் சோப்பு, சேமியா, வாங்காவிட்டால் ரேசன் பொருட்கள் கிடையாது என்று ஊழியர்கள் தெரிவிப்பதாக சமூகஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் புதிய ரேசன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் 'ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்' என்றார்.
- சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23% வரை ஊதியம் அதிகரிப்பு.
- ஊதிய உயர்வால், 1675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் 01.01.2020 ந் தேதியில் இருந்த சம்பள உயர்வு குறித்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வின தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.2,259/-ம், அதிகபட்சமாக ரூ.14815/-ம் ஊதிய உயர்வு கிடைக்கும்.
இவற்றின் மூலம் வேளாண்மை உற்பதியாளர்கள் கூட்டுறவு விற்பறைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க மூத்த வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடிகள் குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வக்கம்பட்டியில் கூட்டுறவு கல்லூரியை இன்று அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் 33 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திலேயே முதன் முறையாக ஆத்தூரில் கூட்டுறவுத்துறைக்கென கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள கூட்டுறவு கல்லூரி மூலம் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதே போல் கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதனை கண்டுபிடிக்க மூத்த வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடிகள் குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.
அடுத்த 2 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.300 கோடி மோசடி சொத்துக்களாவது பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் எந்தவித தவறும் நடக்காதவாறு வெளிப்படை தன்மையுடன் நடைபெறும். தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும்.
கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்