search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mobs"

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    • டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல் ேவார் பயணிப்பதால் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகரில் டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் சில பெண்களும் ஈடுபட்டு ள்ளனர்.

    பஸ்சில் அருகில் நிற்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சக பயணிகளுடன் கலந்து நிற்கும் கொள்ளை கும்பல் பயணிகள் அசந்த நேரத்தில் பணம்-நகையை திருடிச் செல்கின்றனர்.

    மதுரை நகரில் குறிப்பிட்ட வழித்தடங்க ளில் 4 பெண்கள், 19 பவுன் நகையை பறிகொடுத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 25). சம்பவத்தன்று மாலை இவர் மண்டேலா நகரில் இருந்து அரசு பஸ்சில் பழங்காநத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் கற்பகவள்ளி வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.400 ஆகியவற்றை திருடிச் சென்றார்.

    மதுரை பழங்காநத்தம், மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி ஜோதிமணி (52). சம்பவத் தன்று காலை இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வசந்த நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்மநபர், ஜோதிமணி அணிந்திருந்த 6 பவுன் நகையை கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக பறித்துச்சென்றார்.

    பழங்காநத்தம், பொட்டூரணி தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி லோகாமணி (50). இவர் சம்பவத்தன்று மதியம் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்றார். அதன் பிறகு பைக்காராவுக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 3 பவுன் நகையை திருடிச் சென்றார்.

    மதுரை திருப்பரங்கு ன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி பிறைகன்னி (55). இவர் சம்பவத்தன்று மதியம் ஆண்டாள்புரம் பஸ் நிலையத்தில் இருந்து அழகப்பன் நகருக்கு அரசு பஸ்சில் சென்றார்.

    அப்போது மர்ம நபர் பிறைகண்ணி கொண்டு வந்திருந்த பையில் இருந்த 6 பவுன் தங்க வளையல், 2 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை திருடிச் சென்றார்.

    மேற்கண்ட 4 சம்பவங்களும் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. எனவே போலீசார் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் கும்பலை பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் கும்பலுக்கு உதவிய ஆட்டோ டிரைவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டத்துடன் ரெயிலில் கோவை வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கைதான திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார்.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவுதீன் மற்றும் கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 4 பேரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(29) என்ற 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க வெரைட்டிஹால் போலீசார் தீவிரம் காட்டினர்.

    இது தொடர்பாக நேற்று பைசல் என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய பைசல் இவர் இல்லை என்பது தெரியவந்தது. பெயர் குழப்பத்தால் அவரை பிடித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பைசலை தேடினர். இன்று அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, சதிதிட்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய பைசல் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள அன்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×