search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money was stolen"

    • சண்முகவேல் உச்சி மாகாளியம்மன் கோவிலில் தலைவராக உள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கோவை,

    பொள்ளாச்சியை அடுத்த நெகமம் ஏ. நாகூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்(வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவிலில் தலைவராக உள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சண்முகவேல் மற்றும் பூசாரி மோகன்ராஜ் கோவிலில் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் அதிகாலை வழக்கம் போல சண்முகவேல் கோவிலை திறக்க வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    பின்னர் இதுகுறித்து சண்முகவேல் நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவிலுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உச்சி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் (19) என்பதும், அவர் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.3100-யை திருடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • பவானிசாகர் கோடேபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு கோவிலுக்கு பின்னால் கிடப்பது தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் கோடேபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மலையாள பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு கோவிலில் பூைஜகள் முடிந்ததும் பூசாரி வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் உண்டியலை கோவிலுக்கு பின் பகுதிக்கு கொண்டு சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் இது குறித்து பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கோவிலில் இருந்த உண்டியல் பெயர்த்து எடுக்கப்பட்டு கோவிலுக்கு பின்னால் கிடப்பது தெரியவந்தது. மேலும் உண்டியலில் சுமார் ரு. 5 ஆயிரம் பணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரமேஷ் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
    • உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ரமேஷ் (வயது 58) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் கோவிலை திறக்க வந்த பூசாரி ரமேஷ் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • கோவிலின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்

    கோவை:

    கோவை மதுக்கரை ரோட்டில் ஸ்ரீ பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகானந்தம் (வயது 70) என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை மூடிவிட்டு சென்றார்.

    நள்ளிரவு கோவிலின் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை திறந்து அதில் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து முருகானந்தம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    ×