search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mudukulathur"

    • முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஷாஜகான் தலைமையில், உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி வரவேற்றார். மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோகன்தாஸ்

    (7-வது வார்டு தி.மு.க.): 2023-24 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அெஜண்டாவில் உள்ளபடி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சேர்மன், சொத்துவரி 2023-24-க்கு முழுமையாக கட்டினால் 5 சதவீத ஊக்கத்தொகை கழித்தே பெற்றுக்கொள்ளப்படும் என்றார். சேகர் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்): முதுகுளத்தூரில் மட்டுமே டெண்டரில் குறைத்து போடப்படுகிறது. சமரசம் பேச வேண்டும் என்றார். சேர்மன்: எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது. காண்ட்ராக்டர்கள் ஒத்துழைத்தால் போகலாம். கவுன்சிலர் மோகன்தாஸ்: தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும். சேர்மன்: அரசு விதிமுறைப்படிதான் வாங்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • முதுகுளத்தூர் 7-வது வார்டில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை என்று கவுன்சிலரிடம் பொதுமக்கள் முறையீடு செய்தனர்.
    • பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி 7-வது வார்டில் சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் சிமெண்டு குழாயில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் அந்த வார்டு கவுன்சிலர் மோகன்தாசிடம் முறையிட்டனர். மேலும் 7-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில்தெருவில் சாலை பழுதடைந்து கிடப்பது குறித்தும், பொதுமக்கள் கவுன்சிலரிடம் முறையிட்ட னர்.

    இதையடுத்து கவுன்சிலர் மோகன்தாஸ், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் மாலதி ஆகியோர் உடனடியாக சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்ல 3 சிமெண்டு குழாய்களை ரோட்டின் குறுக்கே பதித்து நடைபாதையை சீரமைத்தனர்.

    ஆஞ்சநேயர் தெருவில் கிராவல் அடித்து பொது மக்கள் நடந்து செல்ல உதவி செய்தனர். இதற்காக பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

    மேலும் முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7-வது வார்டுக்கு மட்டும் காவிரி குடிநீர் சப்ளை இல்லை. மற்ற வார்டுகளில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டுவரும் நிலையில் இந்த வார்டுக்கும் காவிரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கவுன்சிலர் மோகன்தாசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    உடனடியாக பைப் லைன் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் கவுன்சிலர் உறுதி அளித்தார்.

    முதுகுளத்தூர் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், இருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டணையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் அருகேயுள்ள வீரம்பலை சேர்ந்த விவசாயி கோவில் பிள்ளை (வயது 45). இவரை முன்விரோதத்தால், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் குமார் (39), எபினேசர் மகன் சத்தியசீலன் (40), யோபு ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக, 2012-ல், இளஞ்செம்பூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு, முதுகுளத்தூர் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் அழகர்சாமி ஆஜராகி, வாதாடினார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடே‌ஷன் குற்றச்சாட்டப்பட்ட குமார், சத்தியசீலன் ஆகிய இருவருக்கும் 8 ஆண்டு சிறை தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மூன்றாவது குற்றவாளி யோபுவை விடுதலை செய்தார்.

    தண்டணைக்குள்ளான இரு குற்றவாளிகளையும், கடலாடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

    முதுகுளத்தூரில் பலத்த காற்று எதிரொலியால் கட்டிட சாரம் சரிந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முதுகுளத்தூர்:

    கஜா புயல் நேற்று கரையை கடந்த பின்பு உள் மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை காற்றும் மழையுமாக இருந்தது. முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத் தூவலைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படியான் (வயது70).

    இவர் நேற்று மழை பெய்தபோது வெளியே சென்றார். அப்போது பலத்த காற்று வீசியது. இதில் பதினெட்டாம்படியான் வீட்டின் அருகே உள்ள கட்டிடத்தின் சாரம் சரிந்து அவர் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 15-ந்தேதி முதல் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே பேரூராட்சி துறையினர் அறிவிப்பு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் பேரூராட்சி மற்றும் உணவு கட்டுப்பாடு, சுகாதார துறையினர் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கபடுகிறதா? என சோதனை செய்தனர்.

    அதுமட்டுமல்லாமல் செயல் அலுவலர் உத்தரவின் பேரில் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் பஜாரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பைகள் வழங்கப்பட மாட்டாது துணிப்பை கொண்டு வரவும் என்ற அறிவிப்பை அனைத்து கடைகளில் உள்ள சுவர்களில் பேரூராட்சி ஊழியர்கள் ஓட்டினர்.

    இதுகுறித்து செயல் அலுவலர் இளவரசி கூறியதாவது:-

    வியாபாரிகள் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்ககூடாது, மீறினால் முதலில் 500 ரூபாயும், அதற்கடுத்து 5 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிப்பதுடன், கடை உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதுகுளத்தூர் அருகே போலீஸ் நிலைய வளாகத்திலேயே டயர், பேட்டரிகளை திருடியதுகூட தெரியாமல் போலீசார் மெத்தனமாக இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதுகுளத்தூர்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மணல் கடத்தி வரும் லாரிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு கீழத்தூவல் போலீஸ் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. கோர்ட்டு உத்தரவை பெற்று உரிமையாளர்கள் லாரியை எடுத்து செல்வார்கள்.

    இந்த நிலையில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டு இருந்த 2 லாரிகளில் இருந்த டயர்கள், பேட்டரிகள் ஆகியவை திருட்டுபோயின.

    இதுகுறித்து அறிந்த கீழத்தூவல் போலீசார் சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தபோது டயர், பேட்டரிகளை திருடியது கீழகொடுமலூரைச் சேர்ந்த கருப்புராஜா, அபிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இவர்களது லாரியும் மணல் கடத்தலில் சிக்கி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    முதுகுளத்தூர், கீழத் தூவல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாள்தோறும் திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    தற்போது போலீஸ் நிலைய வளாகத்திலேயே போலீசார் பறிமுதல் செய்த வாகனத்திலேயே டயர், பேட்டரிகளை திருடியதுகூட தெரியாமல் போலீசார் மெத்தனமாக இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×