search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Municipal council"

    • சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுகிறது.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற பொருள் படித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை அடுத்து வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

    தங்கவேல் (3-வது வார்டு):

    அவினாசி பேரூராட்சியில் புது பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலும் மற்றும் தாலுகா அலுவலகத்தில் இருந்து செங்காடு வரை சாலையோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கடைக்காரர்களிடம் ரூ.5 வாங்கிக்கொண்டு வியாபாரம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்து வருகிறது.

    இதனால் தொழில் வரி, லைசென்ஸ், ஜி.எஸ்.டி. செலுத்தி வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வருபவர்கள் வியாபாரம் வெகுவாக பாதிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அதிக அளவில் சாலையோர கடைகள் பெருகி வருவதால் போக்குவரத்து மிகவும் பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துக்கள் நடக்கிறது. எனவே சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வரி இனங்கள் செலுத்துபவர்களிடம் பாதி தொகை கொடுத்து மீதி தொகையை கட்ட சில நாட்கள் தவணை கேட்டால் அதற்கு நிர்வாகம் ஒத்துழைப்பு தராமல் முழுவதையும் கட்டினால் தான் முடியும் என்று கூறி குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஏரி தோட்டத்தில் வடிகால் அமைக்க முதல்-அமைச்சர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் வழங்கிய தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்குநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரமணி (17- வது வார்டு): மார்க்கெட் பகுதிக்குள் 40 கடைகள் வெறுமனே கிடக்கிறது. சாலையோர கடைகளை அங்கு கொண்டு செல்லலாம்.

    கார்த்திகேயன் (13- வது வார்டு): சங்கமம் குளம் வீதியில் சாக்கடை வசதி இல்லை. அங்கு சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுந்து வருகிறது.மேலும் அப்பகுதியில் வாழும் மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து பல கூட்டங்களில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே நான் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறியவாறு வெளிநடப்பு செய்தார்.

    • கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • கூட்டத்தில் செயல் அலுவலர் , பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பழனி:

    பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜஸே்வரி சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் விஜய்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாலசமுத்திரம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தி சந்தை அமைப்பது, நத்தம் புறம்போக்கு நிலங்களை பேரூராட்சி மன்ற ஆட்சேபனையின்மை தீர்மானமின்றி தனிநபருக்கோ, அமைப்புகளுக்கோ வருவாய்த்துறையினர் பட்டா வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல் அலுவலர் சித்திரைக்கனி, பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி மன்றத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கடைகளை திறப்பது குறித்து கருத்து கேட்கப் பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த பழைய வணிகவளாக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் அதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் இங்கு ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகள் தங்களுக்கே கடைகள் வேண்டும் என்றும், புதிதாக வியா பாரம் தொடங்கு பவர்கள் எங்களுக்கு தான் கடைகளை விட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய நிலையில் யாருக்கு கடைகளை விடுவது என்று தெரியாமல் இருந்த நிலையில் இப்பிரச்சி னையை வியாபாரிகள் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

    வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த காரணத்தினால் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பெரும் வருவாய்இழப்பு ஏற்பட்டதது. இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி இக்கடை களுக்கான ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) மீண்டும் நடைபெற உள்ள இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளிடம் கருத்து கேட்டதோடு கடைகளை திறக்க ஒத்துழைப்பு தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள்,பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
    • வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் கூட்ட அரங்கில் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படிநமக்கு நாமே திட்டம் அல்லது பொது நிதி மூலம் செப்டிக் டேங்க் வாகனம் வாங்கி சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்மற்றும் பேரூராட்சி பகுதியில் கழிவறை கழிவுநீர் ஆகியவற்றை அப்புறப்படுத்தலாம். மேலும் அவினாசி பேரூராட்சி பொதுமக்கள்பயன்பாட்டில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை வருவாய் துறையிடம் கேட்டு பெறுவது என்று தலைவர் தனலட்சுமி கூறினார்.

    இதையடுத்துவார்டு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், சூளை பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீரை வெளியேற்றவேண்டியது குடிசை மாற்று வாரியத்தின் பணியாகும். நமது பேரூராட்சிக்கு தேவையான குப்பை வண்டி வாங்க சொல்லி பல கூட்டங்களில் வலியுறுத்தியும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

    திருமுருகநாதன் பேசுகையில்,அவினாசி வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது. அந்த பணி எப்போது முடியும் என்றார். தலைவர் பேசுகையில், டேங்க் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீக்கிரம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

    • நெற்குப்பை பேரூராட்சி மன்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சேர்மன் புசலான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டது. பேரூராட்சியில் நடை பெற்று வரும் பணிகளின் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    திட்ட இயக்குநரின் வேண்டு கோளுக்கிணங்க பேரூராட்சிகளில் அன்றாட பணிகள் மேற்கொள்ள உதவியாளர், எழுத்தாளர், மின் மற்றும் குடிநீர் பராமரிப்பு மேற்கொள்ள உதவியாளர், புள்ளிவிவர தொகுப்பாளர், அலுவலக காவலர், டிராக்டர் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு சுமார் 10 பேரை பணி நியமனம் செய்தல், மலம், ஜலம் கழிப்பில்லா பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி எடுத்தல், குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றி நட்சத்திர அங்கீகாரம் பெற உறுதிமொழி எடுத்தல், போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×