search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி பேரூராட்சி கூட்டம்
    X

    பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    அவினாசி பேரூராட்சி கூட்டம்

    • சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுகிறது.

    அவினாசி:

    அவினாசி பேரூராட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற பொருள் படித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை அடுத்து வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

    தங்கவேல் (3-வது வார்டு):

    அவினாசி பேரூராட்சியில் புது பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலும் மற்றும் தாலுகா அலுவலகத்தில் இருந்து செங்காடு வரை சாலையோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கடைக்காரர்களிடம் ரூ.5 வாங்கிக்கொண்டு வியாபாரம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்து வருகிறது.

    இதனால் தொழில் வரி, லைசென்ஸ், ஜி.எஸ்.டி. செலுத்தி வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வருபவர்கள் வியாபாரம் வெகுவாக பாதிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அதிக அளவில் சாலையோர கடைகள் பெருகி வருவதால் போக்குவரத்து மிகவும் பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துக்கள் நடக்கிறது. எனவே சாலையோர கடைகள் அனைத்தையும் வேறு தனியான ஒரு இடத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வரி இனங்கள் செலுத்துபவர்களிடம் பாதி தொகை கொடுத்து மீதி தொகையை கட்ட சில நாட்கள் தவணை கேட்டால் அதற்கு நிர்வாகம் ஒத்துழைப்பு தராமல் முழுவதையும் கட்டினால் தான் முடியும் என்று கூறி குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஏரி தோட்டத்தில் வடிகால் அமைக்க முதல்-அமைச்சர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் வழங்கிய தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்குநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரமணி (17- வது வார்டு): மார்க்கெட் பகுதிக்குள் 40 கடைகள் வெறுமனே கிடக்கிறது. சாலையோர கடைகளை அங்கு கொண்டு செல்லலாம்.

    கார்த்திகேயன் (13- வது வார்டு): சங்கமம் குளம் வீதியில் சாக்கடை வசதி இல்லை. அங்கு சாக்கடை வசதி இல்லாததால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சாக்கடை நீர் தேங்கி பெயர்ந்து விழுந்து வருகிறது.மேலும் அப்பகுதியில் வாழும் மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து பல கூட்டங்களில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே நான் மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறியவாறு வெளிநடப்பு செய்தார்.

    Next Story
    ×