என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mutharamman temple"
- புதியதாக கட்டப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 21-ந்தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.
- தென் மாவட்டங்களில் நல்ல கனமழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி யூனியன் கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. புதியதாக கட்டப்பட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவை யொட்டி கடந்த 21-ந்தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.
22-ந்தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை, எஜமா னர் சங்கல்பம், தேவதா சங்கல்பம், விநாயகர் பூஜையை தொடர்ந்து
23-ந்தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு குரு ஹோரையில் முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது.
கடந்த 24-ந்தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 8.15 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு முத்தாரம்மன், பரிவார தெய்வங்களுக்கும், விமான கலசத்திற்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்த ர்கள் கலந்து கொண்ட னர். தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சஷர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும் நடந்தது.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு தென் மாவட்டங் களில் நல்ல கனமழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடு களை கோவில் திருப்பணி குழு தலைவரும், உடன்குடி யூனியன் முன்னாள் துணை தலைவருமான ராஜதுரை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டுராஜன், துணை செயலாளர் தங்க ராஜ், துணை பொருளாளர் சேர்மத்துரை மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்த னர்.
- கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
- இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி யூனியன் கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் நவீன கலைநயத்துடன் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபி ஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனையொட்டி கடந்த 21-ந் தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.நேற்று காலை அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், தேவதா சங்கல்பம், விநாயகர் பூஜை, புன்யா ஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, விநாயகர் ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரம்மா சாரிய பூஜை, தனபூஜை, கோ பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை யும் நடந்தது.
மாலையில் தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சந்தி, பிரவேச பலி, மிருத சங்கிரஹரணம், பாலிஹாஸ்தா பனம், ரஷாபந்தனம், கலா கர்ஷணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது.
இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.
நாளை (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, ஸ்பரு ஷாஹீதி, நாடிசந்தானம், நாமகரணம் ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாரா தனையும், காலை 8.15 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான கலசத்திற்கு ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதில் ஊர் மக்கள் மற்றும் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சஷர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும், 1008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
கும்பாபிஷேக நிகழ்ச்சி யை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் முத்து ஹரிஹர சுப்பிரமணியன் என்ற ஹரிஷ் பட்டர் நடத்துகிறார்.
ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் யூனியன் துணைத் தலைவருமான ராஜதுரை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டுராஜன், துணை செயலாளர் தங்க ராஜ், துணை பொருளாளர் சேர்மத்துரை மற்றும் ஊர் பொது மக்கள் செய்து உள்ளனர்.
- திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது.
- விழா நாட்களில் கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, கும்பாபி ஷேகம், அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள செட்டியார்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ேஹாமம், யாகசாலை பூஜை, கும்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, கும்மியடி, வில்லிசை, மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி வீதி உலா, முளைப்பாரி ஊர்வலம், வானவேடிக்கை, கோலப்போட்டி, சேவாபாரதி சார்பில் சுமங்கலி பூஜை, அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.
சிறப்பு நிகழ்ச்சியாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா தலைமையில் அனைவருக்கும் பகவத் கீதை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சரவணகுமார், கந்தப்பழம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
- 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள வட்டன் விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி மாத பெருங்கொடை விழா கடந்த 29-ந் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் பக்தி இன்னிசை, புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம், பக்தி இன்னிசை, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, 108 பால்குடம் பவனி கோவில் முன்பு இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. தொடர்ந்து அம்மன், மற்றும் பல்வேறுசுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, சுமங்கலி பூஜை, இரவு 12 மணிக்கு கிளி வாகனத்தில் ஸ்ரீ சந்தனமாரியம்மன், பவானி அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, கரகாட்டம், மா விளக்கு பூஜை, முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா நடந்தது.
நேற்று கொடைவிழா நிறைவுபூஜை, இரவு 8 மணிக்கு நெல்லை கண்ணன் குளுவினரின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி என 5 நாள் கொடை விழா நடந்தது. ஏற்பாடுகளை ஊர்மக்கள், விழாக்குழுவினர் செய்து ள்ளனர்.
- விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
- நாளை 108 பால்குடம் பவனி, இரவில் சுமங்கலி பூஜை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.
உடன்குடி:
உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, வருஷாபிஷேகம், 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனியும் நடக்கிறது. நாளை காலை 108 பால்குடம் பவனி, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவில் சுமங்கலி பூஜை, அலங்கார தீபாராதனை, சதந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, நாளை மறுநாள் பகலில் சிறப்பு பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவில் கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் சப்பர பவனியும், தினமும் வில்லின சுவாமிகள் தெருவீதி உலாவும் நடைபெறும்.ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
- தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும்.
இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி வந்தனர்.
கோவிலில் கொடியேறியதும் பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆன காப்புகளை வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூலித்து வந்தனர்.
தங்களது ஊர் பெயரில் தசரா குழுக்கள் அமைத்து ஊரில் தசரா குடில் அமைத்து, காவடி, கரகம், நையாண்டி மேளம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, தாரை தப்பட்டையுடன் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி மாலை முதல் இரவு 9 மணி வரை சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை, வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். அம்மன் பெயரில் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலில் கொண்டு பக்தர்கள் சேர்ப்பதற்கு வசதியாக கோவிலை சுற்றி ஏராளமான சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து 1,500-க்கு மேற்பட்ட சிறப்பு அரசு பஸ்கள் விடப்பட்டுள்ளனன. 10 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை செல்லும்போது கடும் விரதம் இருந்து காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள்.
கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், தன்தலையுடன் அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாராவான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்வார். பின்னர் சிங்கமுகமாக மாறி எதிர்கொள்வான். 3-வது எருமை தலையுடனும், 4-வது சேவல் உருவத்திலும் மாறிமாறி வருவான். 4 உருவத்தையும் அன்னை முத்தாரம்மன் அழிப்பார்.
அதன்பின் முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளி அபிஷேகம், பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில், அதன்பின்பு கோவில் கலை அரங்கத்தில் எழுந்தருளி அபிஷேகம் நடைபெறும்.
நாளை 25-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா சென்று விட்டு நண்பகல் சுமார் 3 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், நாளைமறுநாள் (26-ந்தேதி) பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும்.
சூரசம்ஹாரத்தை காண இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் குலசை பகுதி முழுவதுமே பக்தர்களின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளிலும் தசரா பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
குலசையில் இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரை இருப்பதால், மேற்கு பக்கம் உடன்குடி வழியாகவும் வடக்கு பக்கம் திருச்செந்தூர் வழியாகவும் தெற்கு பக்கம் மணப்பாடு வழியாக மட்டுமே வாகனங்கள் வந்து செல்ல முடியும்.
அதனால் திருச்செந்தூரில் இருந்து மணப்பாடு வரையிலும் மற்றும் உடன்குடி சுற்றுபுற பகுதி முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக மணப்பாடு உவரி செல்லும் அனைத்து வாகனங்களும் பரமன்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
இதைப்போல நாசரேத், சாத்தான்குளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மணப்பாடு வழியாக செல்வதற்கு சாத்தான்குளம் பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 7-ம் திருநாள் ஆகும்.
- இன்று காலையிலே தசரா குமுவினர் வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 7-ம் திருநாள் ஆகும். காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.
மாலை 3 மணி முதல்சமய சொற்பொழிவு, பரத நாட்டியம், மற்றும் கலை நிகழ்சி நடைபெறும், இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலையிலே கடற்கரைக்கு வந்துகடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர், இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்துதங்களது வலது கையில் கோவிலில் இலவசமாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கையில் கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர்ஊராகசென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்கு வார்கள். ஏராளமான தசரா குழுவினர் கூட்டம் கூட்டமாக வந்து காப்பு கட்டினர். இன்று காலையிலே தசரா குமுவி னர் வேடம் அணிந்துஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்தனர். அனைவரும் 10-ம் திருநாள் ஆன வருகிற 24-ந் தேதி அன்று கோவிலில் கொண்டு காணி க்கையை சேர்ப்பார்கள்.
அன்று இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் கடற்கரையில் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். தசரா திருவிழா ஏற்பாடு களை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் இராமசுப்பிரமணியன், கணக்கர் டிமிட்ரோ, மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ளனர்.
- முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 4-ம் நாள் நிகழ்ச்சியில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் பத்திரகாளி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலில் தினமும் முத்தாரம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நான்காம் திருநாளான நேற்று முன்தினம் இரவு மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் பக்தர்களுக்கு எல்லாநலமும்கிடைக்கும் என்பது ஐதீகம். ஐந்தாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு, ஆன்மிக சொற்பொழிவு, வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
+2
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று 5-ம் நாள் ஆகும்.
- 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று 5-ம் நாள் ஆகும். காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு நடக்கிறது. மேலும் நகைச் சுவை பட்டிமன்றம், வில்லிசை நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலை யிலே கடற்கரைக்கு வந்து கடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர். இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர்.
காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். அந்த காணிக்கைகளை 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும்.
தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் ராம சுப்பிர மணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ள னர்.
- முத்தாரம்மன் கோவிலில் மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும்.
- இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் இன்று 4-ம்நாள் ஆகும்.இதையொட்டி காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவும், தொடர்ந்து இரவு 8 மணி வரை நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தா ரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்ரமணியன் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.
மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலை யிலே கடற்கரைக்கு வந்து கடல் நீர் தீர்த்தம் எடுத்து சென்றனர். இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர்.
காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். அந்த காணிக்கைகளை 10-ம் திருநாள் அன்று கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.
தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்பு மணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி செயல் அலுவலர் ராமசுப்பிர மணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ள னர்.
- குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.
தூத்துக்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும், இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது தனிச்சிறப்பு.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்படுகிறது.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
11-ம் நாளான 25-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர். 12-ம் நாளான 26-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
நவராத்திரி விழாவே தசரா திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு பின்னணியாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் தவ வலிமை மிக்கவராக திகழ்ந்தார். ஒருநாள் அவரது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் சென்றார். அப்போது ஆணவத்தால் அவரை மதிக்க தவறியதோடு அவமரியாதையும் செய்தார் வரமுனி. இதனால் மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர், வரமுனியை எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக என சாபமிட்டார்.
வரமுனி எருமைத்தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசூரனாக மாறினார். முனிவராக வாழ்வை தொடங்கிய வரமுனி தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினார். மகிஷாசூரனின் இடையூறுகளை தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி மகிஷாசூரனின் கொடுமைகளை நீக்கித்தர வேண்டினர். அவர்கள் நடத்திய வேள்வியில் தோன்றிய அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழிக்க புறப்பட்டார். மகிஷாசூரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை அன்னை வதம் செய்யும் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
வேடம் அணியும் பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். வேடம் அணிபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் சாதியை குறிக்கும் கொடிகள், ரிப்பன்கள் கொண்டு வரக்கூடாது. காளி வேடம் அணிபவர்கள் பெண்களாக இருந்தால் 10 வயதிற்கு உட்பட்டவராகவும் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- உடன்குடியில் வேடபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்
- ஆடிப்பாடி ஆனந்த கூத்தாடி ஆண்டவனை தரிசித்து தங்களது வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி கொள்ளும் இடம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகும்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி தமிழகத்தில் பல பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து கடலில் நீராடி மாலை அணிந்து 61 நாள், 41 நாள், 21 நாள், 11 மற்றும் 5 நாட்கள் என கணக்கிட்டு விரதம் தொடங்கி வருகின்றனர். தசராவை யொட்டி ஏராளமான தொழி லாளர்கள் வேடப்பொ ருட்களை விதவிதமாக செய்வதில் இரவு -பகலாக ஈடுபட்டுள்ளனர்.
கொடியேற்றத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் விரதமிருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். உடன்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமாகவும் உறுதியாகவும் இருக்கும் என்பதால் உடன்குடியில் பொருட்கள் வாங்க அதிக ஆர்வமாக உள்ளனர். இதனால் உடன்குடியில் வேடபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இது தொடர்பாக வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
ஆடிப்பாடி ஆனந்த கூத்தாடி ஆண்டவனை தரிசித்து தங்களது வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி கொள்ளும் இடம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகும். மனிதன் எந்த சூழ்நிலையிலும் தான் என்று ஆணவத்தை குறைத்து, கையேந்தி தர்மம் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது மேலும் ஒரு சிறப்பாகும் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்