search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mystery figures"

    • சங்கராபுரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
    • கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை வேலு என்பவர் ஓட்டினார். நடத்துநராக பாலகிருஷ்ணன் என்பவர் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் கிடங்கல் பாண்டலம் வழியாக சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்தனர்.

    தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு, தொடர்ந்து கல்வீசி பேருந்து கண்ணாடியை உடைத்தவர்களை தேடி வருகின்றனர்.

    • திட்டக்குடியில் முகமூடி அணிந்து பட்டாக்கத்தியுடன் மர்ம நபர்கள் திரிந்ததால் பரபரப்பு
    • திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நள்ளிரவில் 2 மணி அளவில் திட்டக்குடி விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்டூடியோவில் 2 மர்ம நபர்கள் பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கடையை உடைப்பதை பார்த்து விட்டு யார் என ஒரு சத்தம் போட்டுள்ளார். உடனே மர்ம நபர்கள் பட்டா கத்தியுடன் அவரைத்துரத்தியதால் அவர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார் மேலும் அவர்கள் இருவரும் மங்கி குல்லா அணிந்து உள்ளனர் மேலும் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைத்து விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து உடனடியாக திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நள்ளிரவு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை இதனால் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
    • மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர்கண்ணன். இவரது மனைவி மனைவி சரண்யா.

    இவர் தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரண்யா வின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி யடைந்த சரண்யா செயினை பிடித்து கொண்டார்.

    இருந்தாலும் மர்ம நபர்கள் செயினை பிடித்து இழுத்ததில் கையில் வந்த 2 பவுனோடு தப்பி சென்று விட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே கொட்டகையில் 10 ஆடுகள் திருடப்பட்டது.
    • திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் (நங்குணம்) பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 50). விவசாயி.இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பம் (நங்குணம்) பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 50). விவசாயி.இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார்.

    இவர் நேற்று வழக்கம்போல் தனது ஆடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு தூங்கச சென்றார். பின்பு நள்ளிரவில் கொட்டகையிலிருந்த ஆட்டை பார்த்தபோது, 10 ஆடுகளை திருடப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே கொட்டகையில் கட்டி வைக்கப்பட்ட விவசாயி ஒருவரது 10 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 75 ஆயிரம் ஆகும்.

    ×