search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagathamman Temple"

    • நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பழந்தண்டலம், நாகாத்தம்மன் கோவிலில் உள்ள நல்லாங்கண்ணி திருக்குளம் பகுதியில் நாளை (12-ந்தேதி) பித்ரு தோஷம் நீக்கும் ஜரத்காரு மகரிஷி பூஜை நடை பெறுகிறது.

    துவாபர யுகத்தில் தர்மம் நேர்மை தவறாது வாழ்ந்த ஜரத்காரு முனிவரை நினைத்து குருபூஜை செய்து நெய் மற்றும் நல்லெண்ணை கலந்த தீபமிட்டு அவரது துதி கூறி பிரார்த்தனை செய்தால் பித்ருதோஷம், பல ஆண்டுகளாக திதி விட்ட தோஷங்கள் முழுவதும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆல விருட்சத்தில் மகரிஷி வர்ணனை, கலச பூஜை ஆவாகனம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு 108 மூலிகைகளால் மகரிஷி யாகம், மலர் அர்ச்சனை, ஜரத்காரு மகரிஷி திருக்கதை பாராயணம், மற்றும் மோட்ச தீபம் ஏற்றி கூட்டாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் பழந்தண்டலத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐராவதீஸ்வரர் சிவன்கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    • பண்ருட்டி நாகாத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 10 மணியளவில் சிம்ம லக்னத்தில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி செக்குமேட்டு தெருவில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு நாகாத்தம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் யாகசாலை பூஜை நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றது.

    இன்று காலை இரண்டாம் கால பூஜை நாடி சந்தானம் தத்துவார்ச்சனை,மகா பூர்ணாஹூதி,யாத்ரா தானம் செய்யப்பட்டு9 45 மணிக்கு கடம் புறப்பட்டு திருக்கோவிலை வலம் வந்து 10 மணியளவில் சிம்ம லக்னத்தில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இன்று இரவு அம்மன் வீதிஉலா காட்சி நடைபெறவுள்ளது/ இதற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா கோவிந்தசாமி முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் ,நாகாத்தம்மன் ஆலய விழா குழுவினர், செக்குமேடு வீதி நகரவாசிகள் ஆலய குருக்கள் சேகர் சிவம் இதற்கான ஏற்பாடு களை சிறப்பாக செய்திருந்தனர்

    ×